இந்தியாவில் கூடிய விரைவில் மேகி நூடுல்ஸ்கள் விற்பனை?!

இந்தியாவில் கூடிய விரைவில் மேகி நூடுல்ஸ்கள் விற்பனை?!

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பிடித்தமான உணவாக விளங்கி வந்த மேகி நூடுல்சில், காரீயம் மற்றும் மோனோ சோடியம் குளூட்டாமேட் போன்ற ரசாயன பொருட்கள் அதிக அளவில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதனால் மேகி நூடுல்சுக்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட்டது. இப்படி, இந்தியாவில் மேகி நூடுல்ஸ் குறித்த சர்ச்சை எழுந்ததையடுத்து இங்கிருந்து இருந்து இறக்குமதி செய்யப்படும் மேகி நுடுல்ஸ்களை ஆய்வுக்குட்படுத்த இங்கிலாந்து உணவு தரநிலைகள் முகமை திட்டமிட்டது. ஆய்வு முடிவுக்கு பிறகு மேகி நூடுல்ஸ் உண்பதற்கு முற்றிலும் பாதுகாப்பானது என்று கூறியுள்ள அந்த அமைப்பு மேகி நூடுல்ஸ்சிற்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.
maggi noodiles
அதேபோல், வியட்நாம் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேகி நூடுல்ஸ்கள் பாதுகாப்பானதுதான் என்று தெரிவித்துள்ளது இந்நிலையில் இந்தியாவில் கூடிய விரைவில் சில்லறை விற்பனைக் கடைகளில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு வரும் என்று நெஸ்லே நிறுவனத்தின் இந்தியத் தலைவர் சுரேஷ் நாராயணன் கூறியுள்ளார்.

நெஸ்லேவின் இந்தியத் தலைவராக இருந்த எடின்னி பெனட் கடந்த ஜூலை 25ம் தேதி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.இதையடுத்து, புதிய தலைவராக 55 வயதாகும் நாராயணன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.மேகி நூடுல்ஸ் விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் வழக்கில் இருப்பதால் அது பற்றி எதுவும் கூற இயலாது என்றும், ஆனால், கூடிய விரைவில் மேகி நூடுல்ஸ்கள் சில்லறை விற்பனைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!