இந்தியாவில்தான் கொத்தடிமைகள் அதிகம்!

இந்தியாவில்தான் கொத்தடிமைகள் அதிகம்!

நம் நாடு சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகளாகியும் இன்று வரை கொத்தடிமை முறை ஒழிக்கப்படாமல்தான் உள்ளது. இதற்காகவே 1976ல் கொத்தடிமை ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் கொண்டு வரப்பட்டு 37 ஆண்டுகளாகியும் இதுவரை குறைவான கொத்தடிமைகளே மீட்கப்பட்டனர். குறிப்பாக கடந்த ஆண்டு வரை தேசிய அளவில் 3 லட்சம் பேரும், தமிழக அளவில் 3 லட்சம் பேரும் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் மட்டும் 1.4 கோடி பேர் அடிமை நிலைகளிலும், கடனை அடைப்பதற்காக கொத்தடிமைகளாகவும், கட்டாயமாக வேலை செய்யும் நிலையில் சிக்குண்டும் இருக்கிறார்கள் என்றும் இது உலக கொத்தடிமைகளில் சுமார் 50% என்றும ஒரு அறிக்கை மூலம் தெரிய வருகிறது.
18 - india bonded labour
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வாக் ப்ரீ என்ற மனித உரிமை அமைப்பு, 162 நாடுகளில் அடிமைத்தனம் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், கட்டாய வேலை, கடன்களால் பாதிப்பு, அடிமைத்தன பிறப்பு என உலகம் முழுவதும் சுமார் 30 மில்லியன் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொத்தடிமைகள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. உலகில் உள்ள கொத்தடிமைகளில் பாதி பேர், அதாவது 13.9 மில்லியன் பேர் இந்தியாவில் இருப்பதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. கல்குவாரிகள் மற்றும் உலைகளில்தான் அதிக அளவில் கொத்தடிமைகள் வேலை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது. சீனாவில் 2.9 மில்லியன் கொத்தடிமைகள் உள்ளனர். பாகிஸ்தானில் 2.1 மில்லியன் பேரும், நைஜீரியாவில் 7 லட்சத்து ஆயிரம் பேரும், எத்தியோப்பியாவில் 6 லட்சத்து 51 ஆயிரம் பேரும், ரஷ்யாவில் 5 லட்சத்து 16 ஆயிரம் பேரும் உள்ளனர்.

தாய்லாந்தில் 4 லட்சத்து 73 ஆயிரம் பேரும், காங்கோவில் 4 லட்சத்து 62 ஆயிரம் பேரும், மியான்மரில் 3 லட்சத்து 84 ஆயிரம் பேரும் வங்காளதேசத்தில் 3 லட்சத்து 43 ஆயிரம் பேரும் அடிமைகளாக உள்ளனர். மொத்த கொத்தடிமைகள் எண்ணிக்கையின் முக்கால் பங்கு 10 நாடுகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Revealed: India is home to nearly half of world’s 30 million modern-day slaves.
**************************************************************
There are close to 30 million slaves worldwide with India home to nearly half, a new report has claimed.The Global Slavery Index 2013, the first of its kind, estimates there are 13.9 million people living as slaves in India.China is a distant second with 2.9m slaves; followed by Pakistan with 2.1m; Nigeria 0.7m; and Ethiopia 0.6m.

error: Content is protected !!