இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது!

இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு செயற்கைக்கோள்  விண்ணில் செலுத்தப்பட்டது!

பிஎஸ்எல்வி சி-30 ராக்கெட் மூலம் விண்வெளி ஆய்வு செயற்கைக்கோள் ‘ஆஸ்ட்ரோசாட்’ இன்று (28-ம் தேதி) காலை 10 மணியளவில் வெற்றிகரமாக ஆஸ்ட்ரோசாட் செயற்கைக் கோள்களுடன் 6 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் சரியான சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
astrosat-components
இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ), இந்தியாவின் முதலாவது விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளான ‘ஆஸ்ட்ரோ சாட்’ செயற்கைக்கோளை இன்று காலை 10 மணிக்கு ஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-30 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஒன்றரை டன் எடை கொண்ட ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளுடன் கனடா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் 2 சிறிய செயற்கைக் கோள்கள், அமெரிக்காவின் 4 நானோ செயற்கைக் கோள் கள் என மொத்தம் 6 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.

ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் புற ஊதாக்கதிர்கள் மற்றும் எக்ஸ்ரே கதிர் மண்டலங்கள் கொண்ட விண்வெளிப் பகுதியை ஆய்வு செய்யும். பால்வெளி வீதியில் இருப்பதாக நம்பப்படும் கருந்துளை குறித்தும் இது ஆய்வு செய்யும். ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான 50 மணி நேர ‘கவுன்ட்-டவுன்’ கடந்த சனிக் கிழமை காலை 8 மணிக்கு தொடங் கியது. இன்று விண்ணில் செலுத்தப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது. திட்டமிட்டபடி சரியாக காலை 10 மணிக்கு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்வெளி ஆராய்ச்சி துறை யில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய 3 நாடுகள் மட்டுமே இதுவரை விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளன. இந்நிலையில், ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதால், இப்பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!