ரயில்வேயில் மாசத்துக்கு 6 டிக்கெட்டுகள்தான் அட்வான்ஸ் புக்கிங் : ஐ.ஆர்.சி.டி.சி நியூ பிளான்!

ரயில்வேயில் மாசத்துக்கு 6 டிக்கெட்டுகள்தான் அட்வான்ஸ் புக்கிங் : ஐ.ஆர்.சி.டி.சி நியூ பிளான்!

நம்ம இந்தியன் ரயில்வே அடவான்ஸ் புக்கிங் கவுன்டர்களில் மட்டுமின்றி, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் மூலமாக ஆன்லைனில் ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. உண்மையான பயணி ஒருவர், தன் குடும்பத்தினர் பற்றிய விவரங் களை பூர்த்தி செய்து, வங்கி பரிவர்த்தனையை முடித்து டிக்கெட் எடுக்க குறைந்தபட்சம் 35 நொடிகள் ஆகி விடும்.ஆனால், சில ஏஜெண்டுகள், விசேஷ சாப்ட்வேர்களை பயன்படுத்தி, முன்கூட்டியே விவ ரங்களை பதிவு செய்து, அதிவேகமாக டிக்கெட்டுகளை எடுத்து விடுகிறார்கள். இதனால், உண்மை யான பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்காமல் போய் விடுகிறது.எனவே, தங்கள் இணையதளத்தை ஏஜெண்டுகள் துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்கவும், உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்க mவும் ஐ.ஆர்.சி.டி.சி. புதிய பாதுகாப்பு அம்சங்களை இணையதளத்தில் சேர்த்துள்ளது. இதன்படி, ஆன்லைனில் ஒரு டிக்கெட்டை எடுத்து முடிக்க குறைந்தபட்சம் 35 நொடிகள் ஆகிவிடும். அதற்கு முன்பாக யாரும் டிக்கெட் எடுத்துவிட முடியாதபடி செட்டப் செய்துள்ளனர் . .
rail jan 28
இதனிடையே மேலும் முறைகேடுகளை தடுக்கும் ஒரு முயற்சியாக ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலமாக டிக்கெட் எடுப்பதில் சில புதிய கட்டுப்பாடுகளை ரயில்வே அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளின் படி ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வாயிலாக பயனாளர் ஒருவர் மாதத் திற்கு 6 டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இந்த புதிய கட்டுப்பாடு வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தற்போது ஒரு பயனாளர் மாதத்திற்கு 10 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இடைத்தரர்கள் அதிக டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட புதிய விதிமுறைகள் விவரம்:

1. ஒரு பயனாளர் முகவரி மூலமாக தனிநபர் ஒருவர் காலை 8 மணி முதல் காலை 10 மணி வரை இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே எடுக்க முடியும்.

2. ஒரு பயனாளர் முகவரி மூலம் தனிநபர் ஒருவர் காலை 10-12 மணி வரை தட்கல் முறையிலும் இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதி செய்யலாம்.

3. தனி நபர் ஒருவர் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகள் மட்டுமே முன் பதிவு செய்யலாம்.

4. விரைவு புத்தக விரு ப்பம்( Quick Book Option) காலை 2 மணிமுதல் நண்பகல் 12 மணி வரை முடக்கப்பட்டு இருக்கும்.

5. டிக்கெட் பதிவு தொடங்கிய முதல் 30 நிமிடங்களுக்கு அனைத்து வகையிலான( YTSK, RTSA, IRCTC agents etc) ஏஜெண்ட்டுகளும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. அதன்பிறகே டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம்.

6. ஈ-வல்லேட் மற்றும் ரொக்க அட்டைகள்( கேஷ் கார்டுகள்) மூலமாக காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணி வரை டிக்கெட் பதிவு செய்ய முடியாது.

error: Content is protected !!