இந்தியன் ரயில்வேயில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு!

இந்தியன் ரயில்வேயில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு!

இந்திய இரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் RITES Limited என்ற பொதுத்துறை நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Excutive Trainee பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒராண்டு பயிற்சிக்கு பின்பு உதவி மேலாளராக பணி அமர்த்தப்படுவார்கள். GATE-2013 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
sep 28 - vazhikatti railway
பயிற்சி: Graduate Excutive Trainee

துறைவாரியான காலியிடங்கள்:

சிவில் – 30, மெக்கானிக்கல் – 25, எலக்ட்ரிக்கல் – 05, எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேசன் -02, மெட்டார்லஜிக்கல் -05.

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18.09.2013 தேதிப்படி 30-க்குள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள செல்லானை பதிவிறக்கம் செய்து படிவங்களை பூர்த்தி செய்து இந்தியன் வங்கியின் கிளைகளில் கட்டணத்தை செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:
GATE-2013 தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் இரண்டிலும் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வலு செய்யப்படுவார்கள்.

பயிற்சி: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒர் ஆண்டு பயிற்சி அளிக்கப்படும் பயிற்சியின்போது ரூ.20,600 என்ற அடிப்படையில் சம்பளம் மற்றும் DA மற்றும் HRA வழங்கப்படும். வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்கள் உதவி மேலாளர் பணியில் பணி அமரத்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
18.10.2013

ஆன்லைன் விண்ணப்பப் படிவ நகல் மற்றும் சான்றிதழ் நகல்கள் சென்று சேர கடைசி தேதி: 28.10.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rites.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Related Posts

error: Content is protected !!