இந்தப் புத்தகம் படிக்க மட்டுமல்ல: குடிக்கவும் யூஸ் ஆகும்! – வீடியோ

இந்தப் புத்தகம் படிக்க மட்டுமல்ல: குடிக்கவும் யூஸ் ஆகும்! – வீடியோ

உலகில் பத்தில் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் கேள்விக்குறியாக உள்ளது என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை. சமீப ஆண்டுகளாக பாதுகாப்பான குடிநீருக்கான போராட்டங்கள் இந்தியாவில் வேகம் பெற்று வர. மறுபுறம், குடும்ப வருமானத்தில் கணிசமான பகுதியைக் குடித்து சென்றுவிடுகிறது, பாதுகாப்பான குடிநீருக்கான செலவு. இந்நிலையில் புத்தகத்தின் பக்கங்கள் படிக்க மட்டும்தான் பயன்படுமா என்ன? சில நேரங்களில் குடிக்கவும் பயன்படும் என்று நிரூபித்திருக்கிறார் கனடா நாட்டைச் சேர்ந்த ஆய்வாளரான தெரசா.
water book
ஆம், இவர் கண்டுபிடித்துள்ள புத்தகம் மூலம் தண்ணீரை வடிகட்ட முடியும். மாநில உணவு மற்றும் மருந்து துறை 2014–ம் ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த மார்ச் மாதம் வரை குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கும் ஆலைகள் மற்றும் விற்பனை செய்யும் இடங்களில் அதிரடி ஆய்வு நடத்தியது. இதில் மும்பை, புனே, சோலாப்பூர் சத்தாரா, சாங்கிலி மற்றும் கோலாப்பூரில் தயாரிக்கப்பட்ட மற்றும் விற்பனை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் உணவு மற்றும் மருந்து துறை ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த ஆய்வில் எடுத்து கொள்ளப்பட்ட 95 குடிநீர் மாதிரிகளில் 53 சதவீதம் சுத்தமில்லாத குடிநீராக இருப்பது தெரியவந்தது. இதில் 29 சதவீத குடிநீரில் அதிகளவு பாக்டீரியா இருப்பதும், 23 சதவீத குடிநீர் தரம் குறைந்ததாக இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.தற்போது உலகில் 663 மில்லியன் மக்கள் சுத்தமான குடிநீர் இல்லாமல் பல்வேறு நோய்களால் பாதிக்கப் பட்டு வரும் நிலையில், இந்தப் புதிய கண்டுபிடிப்பின் மூலமாக, உலகம் முழுவதும் பல கோடி மக்களுக்குச் சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் கிடைக்க இருக்கிறது.

இந்த புத்தகத்தைத் திறந்து ஒரு தாளை எடுத்து, அதன் மீது தண்ணீரை ஊற்றினால், மிக சுத்தமான தண்ணீர் கிடைக்கிறது. இப்படிச் செய்வதன் மூலம் 99 சதவிகித பாக்டீரியாக்கள் கொல்லப்பட்டு விடுகின்றன. கனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான தெரசா டான்கோவிச் என்பவரின் கடின உழைப்பில் தான் தண்ணீரைச் சுத்தப்படுத்தும் இந்தப் புத்தகம் உருவாகியிருக்கிறது. மிகச் சிறிய வெள்ளி, மற்றும் செம்புத் துகள்களால் இந்த புத்தகத்தின் பக்கங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் வழியாக நீர் செல்லும்போது, பாக்டீரியாக்கள் கொல்லப்படுகின்றன. இந்த ஒரு புத்தகம் ஒரு மனிதரின் தண்ணீர்த் தேவையை 4 ஆண்டுகளுக்கு தீர்த்து வைக்கும் வல்லமை படைத்தது. விரைவில் இயந்திரங்கள் மூலம் அதிக எண்ணிக்கையில் இந்த புத்தகங்கள் தயாரிக்கப்பட இருக்கின்றன.

 

error: Content is protected !!