ஆஸ்காரின் ‘ஐ’ இசை வெளியீடு – அர்னால்ட் வருகை வீடியோ அறிவிப்பு…!

ஆஸ்காரின் ‘ஐ’ இசை வெளியீடு – அர்னால்ட் வருகை வீடியோ அறிவிப்பு…!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படம் ஐ. கடந்த இரு வருடங்களாக தயாரான நிலையில் வருகிற தீபாவளிக்கு இத்திரைப்படம் வெளியாகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 15ந்தேதி நடை பெறுகிறது. இந்த விழாவிற்கு டெர்மினேட்டர் ஆங்கில படத்தில் நடித்து புகழ் பெற்றுள்ள நடிகர் அர்னால்டு ஸ்க்வார்செனிகர் வருகை தருகிறார். இதனை தனது ரசிகர்களுக்கு வீடியோ செய்தி வழியாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இது போன்றதொரு படத்தை உருவாக்கியதற்காக இயக்குநர் ஷங்கருக்கு அவர் பாராட்டினையும் தெரிவித்துள்ளார்.
i arnold
தன் வருகைக் குறித்த அறிவிப்பு செய்தியில், “ஹலோ இந்தியா, மிகச் சிறந்த இயக்குனரான ஷங்கர் ‘ஐ’ படத்தை இயக்கியிருப்பதற்கு அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். நிறைய விஷவல் எஃபெக்ட்டுகளுடன் அற்புதமான படத்தை உருவாக்கியிருக்கிறார். ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக நான் இந்தியாவிற்கு வருகிறேன்.‘ஐ’ படத்தின் இசை வெளியீடு ஒரு கண்கவர் விருந்தாக அமைய உள்ளது. உங்களை சந்திப்பதற்காக நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். சென்னை…செப்டம்பர் 15 …ஒரு பிரமாதமான விழாவுக்காக…நான் அங்கு இருப்பேன்,” என அந்த வீடியோ அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

வீடியோ பார்க்க:::https://www.youtube.com/watch?v=xRqrHz5fpiM

சென்னை நேரு ஸ்டேடியத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ஐ பட ஆல்பத்தில் இளம் இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலை வழங்கியுள்ளார் என்பதும் இசை வெளியீட்டின் போதே இந்த படத்தின் அருமை பெருமைப் பற்றி உலகம் முழுவதும் பேசப் போவது உறுதி என்கிறார்கள்…

 

error: Content is protected !!