ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ராஜினாமா

ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ராஜினாமா

ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைக்க வழி செய்யும் மாநில மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரண்குமார் ரெட்டி முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.மேலும்
இதுநாள்வரை இருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்தும் உடனடியாக விலகவதாக அறிவித்துள்ளார்.இதற்கிடையில் கடந்த சில நாட்களாக இரவு பகலாக விழித்து 789 பெண்டிங் ஃபைல்களை க்ளியர் செய்தார் என்றும் அதில் சம்பந்தப்பட்ட தொகை 14,000 சி என்றும் தகவல்கள்
வெளியாகியுள்ளது.
Kiran kumar Reddy
ஆந்திர மாநிலத்தின் முதல்வர் பதவியை இன்று ராஜினாம செய்த ரெட்டி எக்காரணம் கொண்டும் தற்காலிக முதல்வராக இருக்கப்போவதில்லை என்றும் கிரண்குமார் அறிவித்துள்ளார்.முன்னதாக இன்று காலை சீமாந்திரா எம்.எல்.ஏ.க்களுடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கிரண்குமார் ரெட்டி, ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார்.
அதே சமயம் புதிய கட்சி தொடங்குவது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்: “தெலங்கானா அமைக்க காங்கிரஸ் காரிய கமிட்டி முடிவு செய்த போதே, பதவியை ராஜினாமா செய்வேன் எனக் கூறியிருந்தேன், ஆனால் கட்சித் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டதற்கு இணங்க பதவியில் தொடர்ந்தேன். அப்போதே பதவியை ராஜினாமா செய்திருந்தால் 4 மாதங்களுக்கு முன்னதாகவே தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டிருக்கும்” என்றார்.

இதற்கிடையில்தான் கடந்த சில நாட்களாக இரவு பகலாக விழித்து 789 பெண்டிங் ஃபைல்களை க்ளியர் செய்தார் என்றும் அதில் சம்பந்தப்பட்ட தொகை 14,000 சி என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இதையடுத்து இன்றோ நாளையோ பதவியை இழக்கும் அல்லது துறக்கும் நிலையில் உள்ள முதல்வர், அவசரமாக கோப்புகளை பார்த்து முடிவு எடுத்து கையெழுத்து போடுகிறார். ஒப்புதல், உரிமம், அனுமதி, அங்கீகாரம், நிராகரிப்பு, தள்ளுபடி என்று ஏதோ ஒரு முடிவு. தொகை மதிப்பீடு அதனால் அரசுக்கு நேரக்கூடிய கூடுதல் செலவு மற்றும் விண்ணப்பதாரர்கள் அடையக்கூடிய பலனை குறிப்பிடுகிறது. விலகும் நேரத்தில் முக்கியமான முடிவுகள் எடுப்பது நல்ல மரபு அல்ல என்று குரல் ஒலிக்கிறது.

Kiran Reddy resigns as CM, quits Congress
**************************************************************
d Reddy has announced his resignation. ‘I can’t continue. I am resigning from the post of CM, MLA and membership of the Congress party. I can’t continue in Congress. I thank them for making me CM. But, they betrayed Telugu people”, he said.

Related Posts

error: Content is protected !!