ஆண் என்பவன் ஆண் .. பெண் என்பவள் பெண்.அதை மாற்றவே முடியாது!

ஆண் என்பவன் ஆண் .. பெண் என்பவள் பெண்.அதை மாற்றவே முடியாது!

Counselling ல் இருப்பதாலா என்னமோ எக்கச்சக்க திருமண சிக்கல்களை என்னைச்சுற்றி கவனிக்கிறேன். யாராவது குடும்பமாய் மகிழ்வாய் இருப்பதை பார்த்தாலே வேற்றுலகவாசியை பார்ப்பதுப்போல் என் உலகம் மாறி இருக்கிறது. ஆண் பெண் உறவுகளில் இப்பொழுது பெரும் சிக்கல்களை காண்கிறேன். முக்கியமாய் இளைய தலைமுறை பொறுப்பு என்று வந்தப்பிறகு தடுமாற ஆரம்பிக்கிறது. குழந்தைகள், வேலை , தன் மகிழ்வு இவற்றை பேலன்ஸ் செய்ய முடியவில்லை. ஐடி செக்டார் வேறு ஈவு இரக்கமற்று வேலை வாங்குகிறது.

ஆண்கள் எத்தனை உதவினாலும் முக்கிய வேலைகளை பெண்கள் கவனிக்க வேண்டிருக்கு. ஈகோ கிளாஷ் அது இது என சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். ஆடம்பர திருமணத்தை விட அவர்களுக்கு ஃபைனான்ஷியலாக உதவலாம் , ஆட்கள் உதவிக்கு வைக்கலாம். இருப்பினும் நிறைய நல்ல சமையல் கூடங்கள் அமைப்பது இன்னொரு தீர்வு. ஆரோக்கிய சமையல்கள் எங்கும் கிடைப்பதில்லை. அதை இன்று பெரிய அளவில் தொழிலாய் செய்தால் உண்மையில் பல குடும்பங்கள் காப்பாற்றப்படும்.

மொக்கையாக டைவர்ஸ் ஐ யோசிக்கிறோம். இன்று ஆண், பெண் இருவரும் தாங்க முடியா ஸ்ட்ரெஸ் கையாள்கிறார்கள். ஆண், பெண் இருவரும் வீட்டு வேலை செய்தே பழகாமல் இருந்ததன் விளைவும். வெறும் கிளப், டூர், பப் என ஓடுவது தீர்வல்ல..வேரில் இருந்து யோசிக்க வேண்டும். ஆண், பெண் வாழ்வில் திருமணம் முன்பே பொறுப்புகள் புரிய வேண்டும். இருவரும் அதற்கு தயாராக வேண்டும். பல மன அழுத்தங்கள், அட்ஜஸ்ட்மெண்ட்கள் என உள்ளன. எல்லா வலியும் தாண்டிதான் பயணிக்க வேண்டி வரும் என உணர்த்த வேணும்.

அதே சமயம் இருவரின் அன்பும், உறவும் இருப்பின் எல்லாம் கடக்கலாம். இது கொஞ்ச காலம் கடக்கும் என்ற பொறுமை நமக்கு போய்விட்டது . அதே சமயம் உறவை அழுத்தவும் கூடாது, அலட்சியமும் செய்யக்கூடாது. இரண்டுக்கும் இடையில் பேலன்ஸ் செய்துவிட்டால் போதும். மகிழ்ந்து வாழ்ந்திடலாம். மிக ஈசியா டைவர்ஸ் என முடிவெடுக்கிறார்கள் சில பெண்கள். ஆண்களும். ஒன்றே ஒன்றுதான். எங்க போனாலும் ஒரு ஆண் தான், ஒரு பெண்தான்

சோசியல் மீடியா பார்த்து ஏமாற வேண்டாம். நான் உள்பட உறவுகளில் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம் .. எனக்கு தெரிந்து போராடாமல் சாதாரணமாய் வாழ்வை கொண்டு செல்பவர்கள் ஒரு பத்து சதவிகிதம் இருப்பின் அதிகம். மிச்சம் எல்லாரும் அறிந்தே இருக்கிறோம். ஆண் என்பவன் ஆண் .. பெண் என்பவள் பெண்.அதை மாற்றவே முடியாது. யாராக இருப்பினும் இதுதான் விதி

அதற்கு இப்ப வாழ்வதே பெட்டர். அவனே / அவளே தேவலை என அடுத்த உறவுகளை பார்த்தவர்கள் சொல்வதையும் கேட்கிறேன் தொலைத்து விட்டால் போவது வாழ்வு. கவனம்.

கீர்த்தி

error: Content is protected !!