ஆண்ட்ராய்ட் லாலிபாப் அப்டேட் பண்ணியாச்சா?!

ஆண்ட்ராய்ட் லாலிபாப் அப்டேட் பண்ணியாச்சா?!

ரொம்ப நாளா எதிர்பார்க்கபட்ட ஆன்ட்ராயிட்டின் லேட்டஸ்ட் – லாலிபாப் – இதோ வருது அதோ வருது – ஜூன்ல கண்டிப்பா வந்திரும்னு சொல்லி நாங்கெல்லாம் அப்டேட் செய்து வச்சு கண்ணே பூத்து போச்சு – ஆனா போன மாசம் கூகுள் ஃபோனான நெக்ஸஸ் 6 மற்றும் நெக்ஸஸ் டேப்ளட் 9ல் மட்டும் ஓஎஸா வந்திச்சு – ஆனா நேற்று முதல் உலகம் முழுவதும் இலவசமா டவுன்லோட் செய்ய முடியும் வகையில் அப்டேட் ரெடி – நல்ல ஓ எஸ் – டவுன்லோட் செய்து கலக்குங்க……!
ravi - nov 4
இதுக்கும் இன்னொரு தமிழன் தான் காரணம் – சுந்தர் பிச்சை என்னும் கூகுள் சீனியர் மேனேஜ்மென்ட் ஊழியர் தான் அவர். இதில் தமிழ் கீபோர்ட் மற்றும் டைப்பிங் சூப்பர் பெர்ஃபார்மென்ஸ் – அது போக பெங்காலி / கன்னடா / மலையாளம் / மராத்தி மற்றூம் தெலுலுங்கும் டக்கராய் டைப் செய்ய இயலும்.டெவலப்பர்கள் இங்கு போய் லாலிபாப்பின் முழு சோர்ஸ் கோடை பெற்றூ கொள்ள முடியும்…………https://android.googlesource.com/ சாதாரண பயணீட்டாளர்கள் வழக்கம் போல அப்டேட் பட்டன் மேல ஏறி நில்லுங்க ப்ளீஸ்…………எனக்கு மிகவும் பிடித்த ஓஎஸ் – பேட்டரி கொஞ்சம் சேவ் செய்யும் வகையில் கிட் கேட்டை தூக்கி சாப்பிட்டது………….

PS – முக்கிய தகவல் – நெக்ஸஸ் ஃபோன்களுக்கு மட்டும் தான் அப்டேட் திறந்துவிடபட்டிருக்கிறது. சாம்ஸங் உட்பட பல நிறுவங்களுக்கு டிசம்பர் மாசம் பட் பல ஹென்ட்செட்களுக்கு அப்டேட் ஆகும் ………ஆனா ஆகாது நிலை – அதனால ஒவ்வொரு மாடலும் – மொபைல் மேனுஃபாக்சரிங் கம்பெனியும் – கூகுளின் கான்ட்ரக்ட் பொறுத்தே – அமெரிக்காவில் பாஸ் பாஸ் —

FLASH – Much Awaited Android 5.0 Lollipop SUCCESS – Download for FREE

error: Content is protected !!