ஆட்டோ கட்டண அடாவடி! – சென்னை போலீஸ் அதிரடி!!

ஆட்டோ கட்டண அடாவடி! – சென்னை போலீஸ் அதிரடி!!

சென்னையில் அனைத்து ஆட்டோக்களிலும் எலெக்ரானிக் மீட்டர்கள் பொருத்தப்பட்டு முதல் 1.8 கிலோ மீட்டர் கட்டணம் ரூ.25. அதற்குமேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக் கும் ரூ.12 கூடுதல் கட்டணம். வெயிட்டிங் ஜார்ஜ் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ரூ.3.50 என்பது தெரியும்படி மீட்டர்கள் வடிவமைக்கப் பட்டன. இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50 சதவீத கூடுதல் கட்டணம் பெற அனுமதிக்கப்பட்டது. இதனிடையே ஆட்டோ டிரைவர்கள் சிலர் மீண்டும் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியதாக பொது மக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து ஆட்டோக் களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற் காக இன்றுமுதல் மீண்டும் போக்குவரத்து துறை அதிகாரிகளும் போக்குவரத்து
போலீசாரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
auto chennai nov 17
இன்று காலை 8 மணிக்கு இந்த சோதனை தொடங்கியது. முதல் கட்டமாக பகல் 12 மணி வரை இந்த சோதனை நடந்தது. இன்று பிற்பகல் 3 மணி முதல் மீண்டும் ஆட்டோக்களில் சோதனை நடைபெறுகிறது. மொத்தம் 45 இடங்களில் இந்த சோதனை நடந்தது. அந்தந்த பகுதி போக்கு வரத்து துறை அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையில் ஈடுபடுகிறார்கள். அவர்களு டன் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் போக்குரவத்து போலீசார் இணைந்து இந்த சோதனை நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.

பேரம் பேசி கட்டணம் கேட்பது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது, மீட்டர் போடா மல் செல்வது, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதியில் ஆட்டோ ஓட்ட அனுமதி பெற்று விட்டு சென்னை பகுதியில் ஆட்டோ ஓட்டுவது, அதிக எண்ணிக் கையில் ஆட்டோவில் ஆட்களை ஏற்றிச் செல்வது போன் றவை விதிமீறல் குற்றங்களாக கருதப்படுகிறது.
எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளில் ஆட்டோ டிரைவர்கள் ஈடுபட்டால் அந்த ஆட்டோக்கள் போக்கு வரத்துதுறை அதிகாரி களால் பறிமுதல் செய்யப் படும். ஆட்டோ ஓட்டும் அனுமதியும் ரத்து செய்யப் படும். அபராதம் செலுத்திய பிறகே ஆட்டோ திருப்பிக் கொடுக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித் தார்.

error: Content is protected !!