ஆசிய விளையாட்டு போட்டி: சானியா டீம்-முக்கு 6வது தங்க பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டி: சானியா  டீம்-முக்கு 6வது தங்க பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டியின் கலப்பு இரட்டையர் டென்னிஸ் இறுதி போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் சாகேத் மைனேனி இணை சீன தைபேயை சேர்ந்த சியன் இன் பெங் மற்றும் ஹாவோ ஹிங் சான் இணையை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றுள்ளது. இதனால் போட்டி நடைபெறும் 10ம் நாளான இன்று இந்தியா 6 தங்கங்களை பெற்றுள்ளது.
saniya
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 8-வது நாளான சனிக்கிழமை முடிவில் இந்தியா பதக்கப் பட்டியலில் 11-வது இடத்துக்கு முன்னேறியது.வில்வித்தையில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம், ஸ்குவாஷ் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 3 ஆயிரம் மீ. ஸ்டீபிள்சேஸில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம், மல்யுத்தத்தில் 2 வெண்கலம், துப்பாக்கி சுடுதலில் ஒரு வெண்கலம் என 11 பதக்கங்களை இந்தியா வென்றது. இதையடுத்து, 3 தங்கம், 5 வெள்ளி, 20 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 16-வது இடத்திலிருந்து 11-வது இடத்துக்கு முன்னேறியது.

பதக்கப் பட்டியலில் 195 பதக்கங்களுடன் (96-58-41) சீனா முதலிடத்திலும், தென் கொரியா (35-42-40) இரண்டாவது இடத்திலும், ஜப்பான் (32-43-38) மூன்றாம் இடத்திலும் உள்ள நிலையில் சானியா-மைனேனி ஜோடி, டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் அந்த செட்டை 6-3 என எளிதில் வென்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது. இது இந்தியாவுக்கு கிடைத்த 6-வது தங்கப் பதக்கம் ஆகும். இதன்மூலம் 6 தங்கம், 7 வெள்ளி மற்றும் 29 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 9-வது இடத்திற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!