‘அம்மா’வாக இருக்க தகுதியான நாடுகள் லிஸ்டில் 140 -வது இடம் பிடித்த இந்தியா!

‘அம்மா’வாக இருக்க தகுதியான நாடுகள் லிஸ்டில் 140 -வது இடம் பிடித்த இந்தியா!

ஒரு குழந்தையின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையானது, தாயின் ஆரோக்கியம். இந்தியாவில் திருமணமாகும் பெண்களில் பாதி பேர் ரத்தசோகை உள்ளவர்களாகவும், மூன்றில் ஒரு பங்கினர் உணவூட்டப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருப்பதாக யுனிசெப் அமைப்பின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் கர்ப்பம், குழந்தை பிறப்பு மற்றும் தாய்ப்பால் வழங்கும் பருவத்தில் ஏற்கனவே ஆரோக்கியமற்றுக் காணப்படும் பெண்கள் மிகவும் மோசமான உடல்நிலை பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
mother may 6
இதன் காரணமாகவே உலகில் 5 வயதுக்குக் கீழே இறக்கும் குழந்தைகளில் 24 சதவீதம் பேர் இந்தியக் குழந்தைகள். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் உணவூட்டப் பற்றாக்குறையால் இறக்கின்றனர். இங்கே பிறக்கும் குழந்தைகளில் 28 சதவீதத்தினர் பிறக்கும்போது எடைகுறைவாக பிறக்கின்றனர். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 44 சதவீதம் பேர் போதுமான எடை இன்றியே வளர்கின்றனர். குழந்தைப் பருவத்தில் சரியாக உணவூட்டம் கிடைக்காமல் போகும் நிலையில் அந்தக் குழந்தையின் ஆயுள் முழுவதும் அதன் பாதிப்புகள் நீடிக்கக் கூடியவை.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ‘குழந்தைகளை பாதுகாப்போம்’ என்ற தொண்டு நிறுவனம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில், பிரசவத்தின் போது ஏற்படும் தாய்-சேய் மரணம், தாய்மார்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு, பொருளாதார நிலை போன்ற காரணிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் முதல் பத்து இடங்களில் ஐரோப்பிய நாடுகளே ஆதிக்கம் செலுத்தின. 9-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா மட்டும் தான் ஐரோப்பாவை சேராத ஒரே நாடு.

பிரான்ஸ் 23-வது இடத்திலும், இங்கிலாந்து 24-வது இடத்திலும் உள்ளது. அமெரிக்கா இரண்டு இடங்கள் சரிந்து 33-வது இடத்தில் இருக்கிறது. இப்பட்டியலில் ஜிம்பாப்வே, வங்காள தேசம் மற்றும் ஈராக் நாடுகளுக்கு கீழே 140-வது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கம் போல ஆப்பிரிக்க நாடுகளே மிக மோசமான நிலையில் உள்ளன. சோமாலியா கடைசி இடத்திலும் அதற்கு மேல் காங்கோ மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு ஆகியவை உள்ளன. முதல் பத்து இடத்தில் இருக்கும் நாடுகளில் 298 தாய்மார்களில் ஒரே ஒருவர் மட்டும் தான் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தையை இழக்கிறார். அதுவே கடைசி இடங்களில் இருக்கும் நாடுகளில் 8-ல் ஒருவர் தன்னுடைய குழந்தையை பறிகொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!