அமெ­ரிக்­கா­ பள்­ளி­க­ளில் நிற­வேற்­றுமை ஒழி­யக் கார­ண­மான லிண்டா பிர­வுன் காலமானார்!

அமெ­ரிக்­கா­ பள்­ளி­க­ளில் நிற­வேற்­றுமை ஒழி­யக் கார­ண­மான லிண்டா பிர­வுன் காலமானார்!

உலக அளவில் அனைவரையும் சமமாக வாவிப்பதாக இப்போது பறைச்சாற்றிக் கொண்டிருக்கும் அமெரிக்காவிலுள்ள பள்ளிகளில் நிறவேற்றுமை ஒழியக் காரணமாக இருந்த கறுப்பழகி லிண்டா பிரவுன், 76 வயதில் நேற்று இறந்தார். அமெரிக்காவில் அப்போதெல்லாம் வெள்ளையர் பிள்ளை களுக்கு தனியாக பள்ளி, ஆப்ரிக்க அமெரிக்கர் குழந்தைகளுக்கு தனியாக பள்ளி என்றிருந்த நடைமுறை, இந்த லிண்டா பிரவுன் எதிர்கொண்ட பிரச்னையால் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

அதாவது 1951ம் ஆண்டு, கன்சாஸ் மாகாணத்தில், டெபேகா என்ற நகரில் வெள்ளையர் பிள்ளைகள் படிக்கும் பள்ளி, லிண்டா பிரவுனை சேர்த்துக் கொள்ள மறுத்தது.“கறுப்பருக்கான பள்ளியில் போய் உங்கள் குழந்தையை சேருங்கள். இங்கே சேர்த்துக் கொள்ள முடியாது” என்று கூறிவிட்டது.

இந்த (வெள்ளையர்) பள்ளிக்கு சில தெருக்கள் தள்ளி லிண்டா பிரவுன் வீடு இருந்தது. ஆனால் ஆப்ரிக்க அமெரிக்கர் குழந்தைகளுக்கான பள்ளியோ சுமார் 3 மைல் தொலைவில் இருந்தது. ஜஸ்ட் 9 வயதான லிண்டா அங்கு செல்ல வேண்டுமானால் சில ரயில் பாதையை கடந்து, பஸ்சில் தனியாக பயணம் செய்தாக வேண்டும். மேலும், இந்த கறுப்பருக்கான பள்ளிகளில் போதிய வசதிகளும் முழுமையாக இருக்கவில்லை.ஆகவே லிண்டாவின் தந்தை கோர்ட்டில் முறை யிட்டார். ‘‘‘ஹலோ லார்ட்.. சமமான கல்வி; ஆனால் தனியாக கிடைக்கும்’ என்பது ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு குடிமை சட்டம் வழங்கும் உரிமைக்கு எதிரானது” என்று வழக்கு தொடுத்தார்.

இதையடுத்து கல்வித் துறைக்கும், லிண்டாவின் தந்தைக்கும் இடையிலான இந்த வழக்கின் தீர்ப்பு,1954ல் அளிக்கப்பட்டது. இத்தீர்ப்பு அமெரிக்கா முழுவதிலும் நிறவேற்றுமையால் தனிமைப்படுத்தும் பள்ளிக் கல்வி முறைக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

இத்தனைக்கும் ஆரம்பத்தில் இந்தத் தீர்ப்பை பல மாகாணங்களில் பல பள்ளிகள் ஏற்கவில்லை. இதனால் பெரும் மோதல்கள், போராட்டங்கள் தொடர்ந்து சில காலம் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!