அமிதாப் அன்னா ஹசாரேயாக தோன்றும் படம் ‘ சத்யாகிரஹா’-மினி ஆல்பம்!

அமிதாப் அன்னா ஹசாரேயாக தோன்றும் படம் ‘ சத்யாகிரஹா’-மினி ஆல்பம்!

பிரகாஷ் ஜா இயக்கத்தில் அமிதாப் பச்சன் நடித்த ஆரக்ஷான் படம், 2011-ல் வெளியானது. அது ஒரு சமூக-அரசியல் கதை. அரசு வேலைகளுக்கு ஜாதி அடிப்படையில் இடது ஒதுக்கீடு செய்வது தொடர்பான படம், அந்தப் படம் வெளியான போது சில மாநிலங்களில் அரசியல் ரீதியான சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இப்போது, அதே டைரக்டருடன்-அமிதாப் ஜோடி, சேர்ந்து கலக்கியுள்ள படம்தான் ‘சத்யாகிரஹா’ இது தமிழில் வெளியான ‘கோ’ படத்தின் தழுவல் என்போரும் உண்டு.
sep 3 -satyagraha-fb-
இந்தியில் உருவாகி, இந்தியாவெங்கும் ரிலீசாகும் இந்தப் படத்தில் அன்னா ஹசாரேவின் சாயலில் அமிதாப்பச்சனின் கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் சர்வதேச செய்தியாளராக கரீனா கபூர். நடுத்தர வர்க்க இளைஞர்களின் பிரதிபலிப்புகளாக அஜய்தேவ்கன், அர்ஜுன் ராம்பால். ‘கெட்ட’ அரசியல்வாதியாக மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் நடித்திருப்பதாகவும் தெரிகிற்து. மேலும் கமர்ஷியல் கலந்த அரசியல் படங்களை எடுப்பதில் வல்லவரான பிரகாஷ் ஜா இந்தப் படத்தை எழுதி, இயக்கி தயாரித்திருப்பதால் படத்திற்கு ஏக எதிர்பார்ப்பு நிலவுகிறது.‘டாமுல்’, ‘பரிநதி’, ‘மிருத்யுதந்த்’, ‘கங்காஜல்’, ‘அபாஹரன்’, ‘ராஜ்நீத்தி’, ‘சக்கரவியூக்’ உட்பட இவரது இயக்கத்தில் உருவான அனைத்துப் படங்களும் முக்கியமானவை. சமகால அரசியலை அலசி ஆராய்பவை. அதே நேரம் கமர்ஷியலாகவும் வெற்றி பெற்றவை.

பீகாரில் பிறந்து வளர்ந்த இயக்குநர் ஜா, புனே திரைப்படக் கல்லூரியில் எடிட்டிங் கோர்ஸில் சேர்ந்தார். ஆனால், முடிக்கவில்லை. பாதியிலேயே வெளியேறிவிட்டார்.1960களின் இறுதியில் நிலவிய மாணவர் எழுச்சி, நக்சல்பாரி போராட்டம், எமர்ஜென்சி ஆகிய வரலாற்று நிகழ்ச்சிகள் இவரது ஆளுமையை உருவாக்கியிருக்கின்றன. இந்த சிஸ்டத்துக்குள் இருந்தபடியே அதை மாற்ற முடியும் என்று நம்புபவர். அதை இவரது அனைத்துப் படங்களிலும் பார்த்தது போலவே ‘சத்யா கிரஹா’விலும் பார்க்கலாம் என்கிறார்கள்.

கோடங்கி

error: Content is protected !!