அப்ப.. ஜெ. மரண முடிச்சு அவிழாதா?

அப்ப.. ஜெ. மரண முடிச்சு அவிழாதா?

ணிக்க முடிவது..

சமீபத்தில் வெளியான வாக்குமூலங்களை பார்க்கும்போது, சசிகலாவை தவிர அவரது குடும்பத்தினர் கூட மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்த்து பேசவில்லை..!

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் இதே திரைதான் போடப்பட்டிருக்கிறது. ஓபிஎஸ், சுகாதாரத்துறை அமைச்சர், துறை செயலாளர் உட்பட அனைவரும் இதில் அடக்கம்போல.

ஓ பன்னீர்செல்வமே இப்போது எனக்கு எதுவும் தெரியாது என்கிறார்..!

ஆனால் அப்போலோ ஓனர், அப்படி வெளிவட்டத்திலேயே இருந்திருக்க முடியாது.

சிகிச்சை தொடர்பாக தன்னைப் பற்றிய எந்த தகவல்களும் வெளியே வரவே கூடாது என்று ஜெயலலிதா கடுமையாக கட்டளை பிறப்பித்திருக்கலாம். அவர் அப்படி செய்யக்கூடியவர்தான்.

அப்படி கட்டளை பிறப்பிக்காத நிலையில் அல்லது கட்டளையை இடவே முடியாத அளவுக்கு அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்திருந்தால்,

மருத்துவமனை ஊழியர்கள் சிகிச்சையளித்த வெளி டாக்டர்கள் உள்பட யாருமே வாய் திறக்க முடியாத அளவிற்கு ஒரு இரும்புத்திரையை உருவாக்கியது யார்?

ஆம்புலன்ஸில் மயக்க நிலையில் அழைத்துச் செல்லப்பட்ட ஜெயலலிதா 75 நாட்களுக்கு பிறகு சவப்பெட்டியில் தான் கொண்டுவரப்பட்டார்.

தங்கள் மாநில முதலமைச்சருக்கு என்ன நேர்ந்தது என்பதை இரண்டரை மாதங்களாக பொதுமக்களால் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் வைக்கப்பட்ட ஒரே மாநிலம், இந்திய வரலாற்றில் தமிழகம் தமிழகம் மட்டுமே.

ஒரு மாநில முதலமைச்சருக்கு இதற்கு இடைப்பட்ட காலத்தில் என்னதான் ஆனது என்று நேரடியாக பார்வையிட்டு விஷயங்களை உறுதி செய்து அரசியல் சாசன சட்ட கடமையைக்கூட செய்யாதது ஏன்?

முதலமைச்சர் ஒரு பெண் என்பதால், வேறொரு அரசியல் சாசன உயர்மட்ட பதவியிலுள்ள பெண்மணியைக் கொண்டு நேரடி விசிட் மூலம் அதிகாரபூர்வமான அறிக்கையை பெற்றிருக்கலாம்.

நாட்டின் பிரதமர் மோடிகூட அப்போலோ மருத்துவமனையில் இருந்து சொல்லப்பட்ட வெறும் தகவலை மட்டும் தான் நம்பி இருந்தாரா?

ஏழுமலை வெங்கடேசன்

error: Content is protected !!