அப்துல் கலாம் இல்லத்திலிருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார் கமல்!

அப்துல் கலாம் இல்லத்திலிருந்து அரசியல் பயணத்தை தொடங்கினார் கமல்!

தமிழக அரசியல் களத்தில் இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் இன்று தனது கட்சியின் பெயர் கொள்கைகளை அறிவிக்க உள்ளார். ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார்.  அதன்படி, இன்று அப்துல் கலாம் வீட்டிற்கு சென்ற கமலை, கலாம் பேரன் சலீம் வாசலில் நின்று வரவேற்று அழைத்துச் சென்றார். அப்போது, கலாம் புகைப்படம் பொறித்த நினைவுப்பரிசு ஒன்றை சலீம் கமலிடம் வழங்கினார்.

வீட்டின் உள்ளே, அப்துல் கலாமின் சகோதரர் முத்து மீரான் மரைக்காயரை சந்தித்த கமல் அவரிடம் நலம் விசாரித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார். அப்போது, அவர் கமலுக்கு பொன்னாடை போர்த்தினார்.

இதற்கிடையே, அப்துல் கலாம் படித்த பள்ளிக்குச் செல்ல கமல் திட்டமிட்டிருந்தார். ஆனால், மாவட்ட கல்வித்துறை அனுமதி மறுத்ததால் அந்த திட்டத்தை கமல் ரத்து செய்துள்ளார். தனது கட்சிப் பெயர், கொடி, கொள்கை உள்ளிட்டவற்றை இன்று தனது ரசிகர்கள் முன்பு இன்று அறிவிக்கும் கமல், மாலை 6.30 மணிக்கு மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறார்.

இதனிடையே கலாமின் இல்லத்திற்கு சென்றது குறித்து ட்விட்டரில் , பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும் இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

error: Content is protected !!