அன்யாஸ் டுடோரியல் – வெப் சீரீஸ் =விமர்சனம்!

அன்யாஸ் டுடோரியல் – வெப் சீரீஸ் =விமர்சனம்!

கோலிவுட் தொடங்கி டோலிவுட் வரை சினிமா எடுப்பவர்களில் பாதி பேர்களுக்கு மேல் ஓடிடி புரொடக்‌ஷனில் இறங்கி விடுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சில வெளிக்கிழமைகளில் தியேட்டர் ரிலீஸ்களை விட ஓடிடியில் வெளியாகும் பட பட்டியல் பெரிசாக இருக்கிறது. அப்படி ரெடியாகி இருக்கும் சீரீஸே அன்யாஸ் டுடோரியல்.

கதை என்னவென்றால் ரெஜினா, நிவேதிதா இருவரும் சகோதரிகள். தந்தை இழந்து தாயின் ஆதரவில் வளர்ப்பவர்கள். குடும்பப் பிரச்சினைகளால் மனமுடைந்த லாவண்யா மூத்த சகோதரி மதுவுடன் சண்டை போட்டு, தனது வீட்டை விட்டு வெளியேறி ஒரு அபார்ட்மெண்ட்டில் வாடகைக்கு தனியாக வாழத் தொடங்குகிறாள். அந்த குடியிருப்பில் அவளைத் தவிர வேறு யாரும் தங்குவதில்லை. கோவிட் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நேரமும் இதுதான். வேறு வழிதெரியாமல், தைரியமாகவும் தனிமையாகவும் இருக்கும் லாவண்யா இன்ஸ்டாகிராமில் அன்யாஸ் டுடோரியல் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பரபரப்பாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தனது ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்து கொண்டிருப்பது அக்கா மவிற்;குப் பிடிக்காமல் போகிறது. தனிமையில் இருக்கும் லாவண்யா அமானுஷ்ய நடவடிக்கைகளை அனுபவிக்கத் தொடங்கும் போது கதையில் திருப்பம் எழுகிறது. ஒரு நாள் மேக்கப் பற்றி லைவ் கொடுக்கும்போது… அவளுக்குப் பின்னால் பேய் இருப்பதைப் பின்தொடர்பவர்கள் கவனிக்கிறார்கள். அதன் மூலம் லாவண்யா சமூக வலைதளங்களில் பிரபலமாகிறாள். அன்யாஸ் டுடோரியல் பக்கத்தைப் பின்தொடர்பவர்கள் அதிகரிக்க சிலர் தங்கள் தயாரிப்புகள் மற்றும் பிராண்டுகளை விளம்பரப்படுத்த பணம் கொடுக்கிறார்கள். லாவண்யா அமானுஷ்ய நடவடிக்கைகளை அனுபவிக்கத் தொடங்கும் போது கதையில் திருப்பம் எழுகிறது. அதாவது… லாவண்யாவின் அக்கா மது (ரெஜினா) தன் தங்கை செய்வதெல்லாம் குப்பை என்கிறாள். சிறுவயதில் இருந்தே பேய், பிசாசு கிடையாது என்பது லாவண்யாவுடன் தனக்கும் தெரியும் என்கிறாள். மது செய்யும் ஒரு காரியத்தால் லாவண்யாவின் அன்யாஸ் டுடோரியல் பக்கம் பின்தொடர்பவர்களை இழக்க நேரிடுகிறது. அதன்பிறகு, இன்னொரு லைவ் செய்த லாவண்யா, தன் மூத்த சகோதரி தன்னை ஒரு குழந்தையாக எப்படி நடத்தினாள் என்று கூறுகிறார். அவள் சகோதரியுடன் இருப்பதை விட பிசாசுடன் இருப்பது சிறந்தது என்கிறார். துரதிர்ஷ்டவசமாக, இந்த திகில் கூறுகள் அவரது சகோதரி மதுவுடன் தொடர்பு கொண்டுள்ளனவா? லாவண்யாவின் வாழ்க்கையில் என்ன திகில் மறைந்திருக்கிறது? அக்கா மதுவுடன் அவளுக்கு என்ன சண்டை? லாவண்யாவின் வாடகை வீட்டில் பேய் நடமாட்டம் உள்ளதா? இந்த கேள்விகளுக்கான பதில்தான் ஏழு அத்தியாயங்களைக் கொண்ட இந்த தொடர்

முழுக்க முழுக்க பெண்களை முன்னிலைப்படுத்தி இந்த தொடரை இயக்கியிருப்பதும் ஒரு பெண்தான் என்பது சிறப்பு… அவர் பல்லவி கங்கிரெட்டி

அந்த நீலமான முகத்தில் பரவலாக பலவித முகபாவங்களைக் காட்டி தன் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார் ரெஜினா காசென்ட்ரா. அவரது ஆங்கில உச்சரிப்பும் அபாரம். தொடரின் பின்பாதியில் அதகளம் புரிகிறார் ரெஜினா. நாகரிகத்தின் உச்சத்திலிருக்கிற பெண்ணாக நிவேதிதா சதீஷ். மனதில் பயம் தொற்றினாலும் அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் சமாளிக்கும் பாத்திரத்தில் நிவேதிதா. நவ நாகரிகப் பெண்ணாக வரும் அவரது நடிப்பும் துடிப்பு. உண்மையிலேயே அக்காவும், தங்கையுமோ என்று என்ன வைக்கிறார்கள் ரெஜினாவும் நிவேதிதாவும். இவர்களை தவிர அங்கொன்றும் இங்கொன்றுமாக வரும் நடிகர்களின் பங்களிப்பும் நிறைவாக இருக்கிறது.

அமானுஷ்ய கதை என்பதால் இருட்டுக் காட்சிகள் அதிகம்; அதுவும் ஒரே வீட்டிலேயே சுற்றிச்சுழல்கிற கதைக்களத்தில் இருக்கிறது கேப்பில் கேமராவை எப்படி சுழற்றினால் சலிப்பு தட்டாது என உணர்ந்து உழைத்திருக்கிற ஒளிப்பதிவாளர் பாராட்டுக்குரியவர்.

இதுபோன்ற வெப் சீரிஸ் களுக்கு அளவான பின்னணி இசை போதுமானது என்ற அளவில் இசை அமைப்பாளரும் அடக்கி வாசித்திருக்கிறார்.

மெதுவே நகரும் ஆரம்பக் காட்சிகள் தவிர்த்து கமர்ஷியலுக்காக காட்சிகளை நிரப்பாமல் வித்தியாசமாக திரைக்கதை அமைத்திருப்பது நல்ல முயற்சி!

ஆனால் பரபரப்பான பின்பாதி பகீர்; திகீர் என்று பறக்கிறது!

error: Content is protected !!