அடேங்கப்பா 60 கோடிக்கும் அதிகமா பணப் புழக்கம்! – சம்திங் ராங்! – ரிசர்வ் பெங்க கவர்னர் பேட்டி

அடேங்கப்பா 60 கோடிக்கும் அதிகமா பணப் புழக்கம்! – சம்திங் ராங்! – ரிசர்வ் பெங்க கவர்னர் பேட்டி

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் அறிவிக் கப்பட்டுள்ளன. அசாமிலும், மேற்கு வங்காளத்திலும் முதல் கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன.கடந்த தேர்தல்களின் போது வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் தருவதாக புகார் எழுந்தது. இப்போ தும் தேர்தலில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், வாக் காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுகளை பெற முயற்சிப்பதாக பரவலாக குற்றச்சாட்டு உள்ளது. தேர்தல் காலத்தில் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.
rbi apr 6
இதன்காரணமாக தேர்தல் கமிஷன் பறக்கும் படைகளை அமைத்து, உரிய ஆவணம் இன்றி எடுத்துச்செல்கிற பணத் தை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.இந்த நிலையில், 2016-17 நிதி ஆண்டுக்கான முதல் பணக் கொள்கையை பாரத ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், மும்பையில் நேற்று வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் , “தேர்தல் நேரத்தில் சாதாரணமாகவே பொதுமக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். அதற்கான காரணங்களை நீங்களே யூகித்துக்கொள்ளலாம். நாங்களும் யூகிக்கிறோம்.இப்போது பணப்புழக்கம் தேர்தல் நடக்கிற மாநிலங்களில் மட்டுமல்லாது, அவற்றின் அண்டை மாநிலங்களிலும் அதிகரித்துள்ளதை நீங்கள் காண முடியும். அதில் ஏதோ இருக்கிறது. நாம் அதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.தற்போது பொதுமக்களிடம் ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் கூடுதல் பணம் புழக்கத்தில் உள்ளது. இது அசாதாரணமான ஒன்றாகும். இது கவனிக்கத்தக்கதாகும்” என்று அவர் கூறினார்.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மார்ச் 18-ந் தேதியுடன் முடிந்த வாரத்தில் பணப்புழக்கம் 48 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, ரூ.2 லட்சம் கோடியை எட்டி உள்ளதாக காட்டுகின்றன.அதே நாளுடன் முடிந்த இரு வார காலத்தில் வங்கி டெபாசிட்டுகளின் வளர்ச்சிவீதம் கடந்த 53 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 10 சதவீதத்துக்கும் கீழாக 9.9 சதவீத அளவுக்கு குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் 2016-17 ஆண்டுக்கான முதல் ரிசர்வ் வங்கி கொள்கை நிர்ணயிக்கும் கூட்டம் ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் மும்பை யில் நேற்று நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத் துக்குப் பின்னர் செய்தியா ளர்களை சந்தித்த ரகுராம் ராஜன் ரெபோ வட்டி விகிதம் குறைக் கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதன்படி ரிசர்வ் வங்கியிடமி ருந்து வங்கிகள் வாங்கும் கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டியான ரெபோ விகிதம் 6.75 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதமாகக் குறைக்கப் பட்டுள்ளது.

சிஆர்ஆர் எனப்படும் வங்கி களின் ரொக்க கையிருப்பு விகிதம் 4% என்கிற அளவிலேயே தொடர்கிறது. அதே நேரத்தில் வங்கிகளின் ரொக்க கையிருப் பின் தினசரி விகிதம் 95 சதவீதத்திலிந்து 90 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டிக் குறைப்பின் மூலம் மறைமுகமாக உற்பத்தி துறை செலவினங்கள் குறையும். மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உள்ள நெருக்கடிகள் மற்றும் வங்கிளுக்கு உள்ள இடர்பாடு (ரிஸ்க்) அளவும் ஓரளவுக்குக் குறையும் என்றும் ராஜன் குறிப் பிட்டார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் விவசாய உற்பத்திக்கும் முக்கிய பங்கு உள்ளது என்று குறிப்பிட்ட ராஜன், பருவநிலை சாதக மாக இருக்கிறபோது தேவைக் கேற்ப இருப்பை கையில் வைத்துக் கொள்ள முடியும். ஆனால் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் பருவ நிலைகள் மாற்றமைடைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

2016-17 நிதியாண்டில் பொரு ளாதார வளர்ச்சி 7.6% ஆக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித் துள்ளது. உற்பத்தி நடவடிக் கைகள் குறைவாக இருப்பது மற்றும் கடன் வளர்ச்சி விகிதத்தில் பெரிய மாற்றம் இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் ரெபோ வட்டி விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!