அஜித் -தின் விவேகம் டிரைலரும் சாதனைப் படைக்குமா?

அஜித் -தின் விவேகம் டிரைலரும் சாதனைப் படைக்குமா?

சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விவேகம்’ படத்தில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப்படம் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாக உள்ள இப்படம் குறித்து நாள் தோறும் இண்ட்ரஸ்டிங்கான் தகவல் வெளியான வண்ணம் உள்ளது. அதேநேரத்தில் `விவேகம்’ படத்தின் டீசர் உலகளவில் புதிய சாதனையையும் படைத்திருக்கிறது.

படத்தில் இருந்து பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியும் நெருங்கி வருவதால் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகுமா? என்ற சந்தேகமும் அஜித் ரசிகர்களிடைய எழுத் தொடங்கியது. இந்நிலையில், `விவேகம்’ படத்தின் டிரைலர் தயாராகி விட்டதாகவும், டிரைலர் குறித்த அறிவிப்பினை படத்தின் இயக்குநர் சிவா அறிவிப்பார் என்று `விவேகம்’ படத்தின் எடிட்டர் ஆண்டனி ரூபன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே படத்தின் டீசர் உலக சாதனை படைத்திருக்கும் நிலையில், டிரைலரும் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இந்தப் படத்தின் தமிழ்ப் பாடல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டன. ஆனால், தமிழில் வெளியானதைப்போல அல்லாமல் தெலுங்கில் படத்தின் இசை வெளியீடு வழக்கமான விழாவாக நேற்று (ஆகஸ்ட் 15) ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த நிலையில் அஜீத் நடித்த படங்களிலேயே இதுவரையில் இல்லாத அளவுக்கு ‘விவேகம்’ படம் அதிக விலைக்கு விற்பனையாகி உள்ளதாகத் தயாரிப்பாளர் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுவரையில் 120 கோடி ரூபாய்க்கு ‘விவேகம்’ படம் வியாபாரமாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுவரையில் இந்தாண்டு வெளியான படங்களில் அதிக தொகைக்கு வியாபாரம் செய்யப்பட்ட படமான ‘பாகுபலி 2’ படத்துக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது விவேகம்.

error: Content is protected !!