‘அங்குசம்’டைரக்டர் மனுகண்ணன் மீது(ம) அவதூறு வழக்கு!

‘அங்குசம்’டைரக்டர் மனுகண்ணன் மீது(ம) அவதூறு வழக்கு!

நாட்டில் இப்போது பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் சட்டம் தகவல் அறியும் உரிமை சட்டம். ஆனால் இந்த சட்டத்தை ஒரு சிலர் மட்டுமே சரியாக பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களும் மிரட்டப்படுகிறார்கள். மக்களிடம் இந்த சட்டம் பற்றி விழிப்புணர்வு இல்லை. இதனை மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகி இருககிறது. படத்தின் பெயர் அங்குசம். ஸ்கந்தா, ஜெய குஹா போன்ற நியூபேஸ்கள் நடித்த படத்திற்கு மனுகண்ணன் என்பவர்தான் புரட்யூசர் & டைரக்டர்.
24 Angusam Movie director
முடிவடைந்து சென்சாரும் வாங்கிய அந்தப் படத்திற்கு வரிவிலக்கு கொடுக்க தணிக்கைக் குழுவே ஸ்பெஷலாக பரிந்துரைத்திருந்தது இருந்தபோதும் ஏனோ அந்தப் படத்திற்கு வரிச்சலுகை கிடைக்கவில்லை. உடனே தனக்கு நேர்ந்த அதிர்ச்சி அனுபவங்களை கோபமாக ‘லஞ்சத்தை எதிர்க்கவே லஞ்சம் கொடுத்தாகணும்’ என்ற ரீதியில் குமுறி நக்கீரன் இதழுக்கு பேட்டிக் கொடுத்திருந்தார். அதில் அமைச்சர் லஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதைத் தொடர்ந்து இயக்குநரின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தரபில் மறுப்பு வெளியானதுடன் படத்துக்கும நேற்று வரிவிலக்கு அளித்து ஆணை பிறப்பித்தது தமிழக அரசு.

அது மட்டுமின்றி இன்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் தமிழக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் செய்தி துறை அமைச்சருக்கும் இந்த சமுதாயத்தில் உள்ள நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக அவதூறான செய்தி வெளியிடட.நக்கீரன் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ், குறும்பட இயக்குனர் மனுகண்ணன் ஆகியோர் மீது கிரிமினல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்’என்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் “நக்கீரன் பத்திரிகையில் கடந்த 19–ந்தேதி வெளியான இதழில் லஞ்சத்தை எதிர்த்த படத்துக்கு லஞ்சம் கேட்ட மந்திரி என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது. அந்த செய்தியில் குறும்பட இயக்குனர் மனு கண்ணன் பேட்டி வெளியாகி இருந்தது.

அதில் தமிழக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் செய்தி துறை அமைச்சருக்கும் இந்த சமுதாயத்தில் உள்ள நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக அவதூறான செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.

எனவே நக்கீரன் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ், குறும்பட இயக்குனர் மனுகண்ணன் ஆகியோர் மீது கிரிமினல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.”என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

error: Content is protected !!