October 16, 2021

ஹேமமாலினி – தர்மேந்திரா இளைய மகளுக்கு இன்று திருமணம்!

இந்திப்பட நட்சத்திர தம்பதி ஹேமமாலினி – தர்மேந்திரா. இவர்களின் இளைய மகள் அஹானாவுக்கும் டெல்லியைச் சேர்ந்த வைபவ் வோராவுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. வைபவ் வோரா தொழில் அதிபராக இருக்கிறார்.
அகானா–வைபவ் வோரா திருமண நிச்சயதார்த்தம் கடந்த வருடம் நடந்தது. இவர்களின் திருமணம் இன்று நடக்கிறது.
hemamalini esha-deol-wedding
தமிழ்நாட்டை சேர்ந்த ஹேமா மாலினி, இந்தியில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இந்தி நடிகர் தர்மேந்திராவை காதலித்து கல்யாணம் செய்தவர். இவர்களுக்கு இஷா தியோல், அஹானா தியோல் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் இஷாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இந்நிலையில் இரண்டாவது மகள் அஹானாவுக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது. இஷாவின் திருமணத்தின் போது அஹானாவும், டில்லியை சேர்ந்த தொழிலதிபர் வைபவ்வும் சந்தித்துள்ளனர். பார்த்த மாத்திரமே இருவருக்கும் பிடித்துவிட்டது. இதனையடுத்து இருவரது வீட்டாரும் கலந்து பேசி இவர்களது திருமணத்திற்கு ஓ.கே. சொன்னனர். கடந்த அக்டோபர் 22ம் தேதி தான் வைபவ்-அஹானாவின் திருமணம் நிச்சயமானது. இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்ட நிலையில் இன்று திருமணம் நடக்கிறது.

மும்பை ஜுகு பகுதியில் ஹேமமாலினிக்கு ஆடம்பர பங்களா வீடு உள்ளது. இந்த வீட்டில் நேற்று மெகந்தி நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி வீடு மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.நெருங்கிய உறவினர்கள் இதில் கலந்து கொண்டனர். இன்று நடக்கும் திருமணத்தில் இந்தி நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.