September 20, 2021

”ஹீரோயினாக நடிக்க நான் ரெடி சான்ஸ் தர்றதுக்கு நீங்க ரெடியா?” – நீலிமா ஆல்பம்!

தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. பாண்டவர்பூமி, விரும்புகிறேன் படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார். தம் படத்திலிருந்து ஹீரோயின் தோழியாக நடிக்க ஆரம்பித்தார். பிரியசகி, இதய திருடன், திமிரு, மொழி, சந்தோஷ் சுப்பிரமணியம், ராஜாதிராஜா, நான் மகான் அல்ல ஆகியவை அவர் நடித்தவைகளில் முக்கியமான படங்கள். சினிமாவில் தோழியாக நடித்துக் கொண்டே தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். கோலங்கள், தென்றல் அவற்றில் முக்கியமானவை. பின்னர் சீரியல் இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலான பிறகு ஒரு வருடங்கள் டயட்டில் இருந்து, ஜிம்முக்கு போயி, சில சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு, உடல் எடையை பாதியாக குறைத்து இப்போது கிளாமர் குயினாக தன்னை மாற்றிக் கொண்டு விட்டார். இதையடுத்து தனியாக போட்டோ ஷுட் நடத்தி அதனை தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பி “நான் ஹீரோயினாக நடிக்க ரெடி சான்ஸ் தர்றதுக்கு நீங்க ரெடியா?”ன்னு கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.

.