September 25, 2021

ஹாப்பி ஆட்டோ – “சுகமான சவாரி” ஸ்மார்ட் ஃபோன் ஆப்…!

ஆட்டோனாலே அக்கபோருன்னு அர்த்தமாகி போச்சி. அதுக்கு ஆப்பு வைக்கிற மாதிரி அங்கொன்னு இங்கொன்னு அரசு திட்டங்கள் கொண்டு வந்தாலும் அதையும் ஒப்புக்கு சப்பான்னு சில நாட்கள் நடை முறையில வச்சிட்டு அப்புறம் அதுக்கு மூடு விழா போடுவாங்க ஆட்டோக்காரங்க. அதுக்கெல்லாம் ஒட்டுமொத்தமா ஒரு முடிவு கட்ட ஆட்டோ ஆப் வந்திருக்கு. இதுக்கு பேரு சுகமான சவாரி.
ravi auto 20
ஆனா இப்ப பெங்களூர்ல மட்டும் தான் விரைவில் வருது. நீங்க வண்டியில ஏறி உட்கார்ந்த உடனே, பெங்களுரில் அத்தனை ஆட்டோவில் டிரைவர் பின்னாடி அவரோட புகைப்படத்தோட லைசென்ஸ் / பர்மிட் / வண்டி நம்பர் டீட்டெயில் இருக்கும். அதனால ஆட்டோ டிரைவர் கரெக்டா ஒட்டுகிறாரா, சாலை விதி முறைகளை மதிக்கிறாரா, கரெக்ட்டான அமவுன்ட் வாங்குறாறான்னு இந்த ஆப்பை திறந்து பதிவு செய்தா போதும். இந்த தகவலை ஒவ்வொரு முறையும் கமிஷனர் அலுவலுக சர்வருக்கு செல்லும். இப்படி அடிக்கடி ஒரு ஆட்டோ டிரைவரின் நல்ல குணங்கள் அடிக்கடி சென்றால் பெங்களூர் ஆர் டி ஒ மற்றும் போலீஸ் உதவியுடன் “ஹாப்பி ஸ்டிக்கர்” ஒன்றை தரும் அதை ஆட்டோவில் அவர்கள் ஒட்டுவார்கள்.

அடுத்த முறை அந்த வகை ஸ்டிக்கர் ஒட்டிய ஆட்டோக்களில் நீங்கள் நிம்மதியாக பயணிக்கலாம். அப்படி ஸ்டிக்கர் ஒட்டிய ஆட்(டோக்)கள் மற்ந்தும் மறுபடியும் தப்பு செய்தால் திரும்பவும் தண்டனை மற்றும் ஸ்டிக்கர் ரிமூவ் செய்யபடும்.

FREE APP DOWNLOAD LINK – https://play.google.com/store/apps/details?id=com.pec.happy_auto