September 29, 2021

ஹஜ் புனித யாத்திரை நெரிசலில் 717 பேர் பலி : வீடியோ

இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவிற்கு உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக் கானவர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று (செப்.,24) பக்ரீத் என்பதால் அதிகமானவர்கள் வழிபாடு நடத்த மெக்கா நகரில் குவிந்தனர். அதிகமானவர்கள் ஒரே நேரத்தில் மினாவில் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்வில் பங்கேற்றனர். இந்த நேரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி சுமார் 717 பேர் உயிரிழந்துள்ளனர். 800 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் 4 ஆயிரம் பேரும் பல வாகனங்களும் ஈடுபட்டுள்ளன .
mecca sep 25
படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால் சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் அவசர நிலை சிகிச்சைகள் அளிக்க தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. மொபைல் மருத்துவமனைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மலேசியா, இந்தோனேஷியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் என சர்வதேச ஹஜ் கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார்.

மெக்கா நகரில் இம்மாதத்தில் நடைபெறும் இரண்டாவது பயங்கர விபத்து இது. யாத்திரிகர்கள் கூட்ட நெரிசல் ஏற்பட்டு கடந்த 2006ம் ஆண்டு பெரும் விபத்தில் 346 பேர் பலியானார்கள். இதை யடுத்து, மெக்காவில் ஆண்டுதோறும் அனுமதிக்கப்படும் புனித யாத்ரீகர்களின் எண்ணிக் கையை சவூதி அரசு கண்காணிக்கத் தொடங்கியது. மேலும், எண்ணிக்கையைக் கட்டுப் படுத்தவும் தொடங் கியது.இருப்பினும், மெக்கா செல்லும் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. யாத்ரீகர்களை சமாளிக்க கூடுதல் வசதிகளுக்காக மெக்காவில் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஒரே நேரத்தில் 22 லட்சம் பேர் கூடும் வகையில், பெரிய மசூதியை நான்கு லட்சம் சதுர மீட்டர் அளவுக்கு விரிவாக்கும் பணிகள் நடைபெறுகின்றன. கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் ஒன்று திடீரென அறுந்து விழுந்து விபத்துக்குள்ளா னதில் 107 பேர் பலியாகினர். 238 பேர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது

இதனிடையே, தற்போதைய விபத்தில் பலியானவர்களில் 3 பேர் இந்தியர்கள் என்று கூறப் படுகிறது. 2 இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஒருவரை அடையாளம் காணும் முயற்சி நடைபெற்று வருகிறது. இந்தியர்கள் 1.5 லட்சம் பேர் நடப்பு ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் நெரிசலில் சிக்கி உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப் பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது,