October 16, 2021

ஸ்ருதி ஹாசன் பாலியல் தொழிலாளியாக நடித்த இந்திப் படம் தமிழிலும் ரிலீஸ்!

கோலிவுட்டில் 7ம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன்.இதன் பின்பு தனுஷுடன் 3 படத்தில் நடித்தார். இந்தப் படம் தோல்வியடைந்ததால் ஸ்ருதிஹாசன் தன்னுடைய முழு கவனத்தையும் தெலுங்கு திரையுலகம் பக்கம் திருப்பினார்.அங்கு எதிர்பார்த்த படியே வெற்றி கிட்டியது. அங்கு ஸ்ருதி நடித்த கப்பர் சிங் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதால், அவரை தேடி வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன.இந் நிலையில் இப்போதும் தெலுங்கில் முன்னணி நடிகை போட்டியில் இருக்கும் ஸ்ருதிஹாசன் ‘டி டே’ என்ற பாலிவுட் படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்த படத்தை தமிழில் தாவூத் என்ற பெயரில் ரிலீஸ் செய்யப் போகிறார்கள்.
jan 29 shruti
கடந்த ஆண்டு ஹிந்தியில் வெளியான இந்த படமான டி டே–யில் ஸ்ருதிஹாசன் பாலியல் தொழிலாளியாக நடித்த காட்சிகளும், போட்டோக்களும் அப்போதே டாபிக்க்லாக இருந்தது.அப்படத்தில் ஸ்ருதியுடன் அர்ஜுன் ரம்பால், இர்பான் கான், ரிஷி கபூர், சந்தீப் குல்கர்னி, ஹியூமா குரேசி ஆகியோர் நடித்திருந்தனர். சங்கர் இஷான் லாய் இசை அமைத்திருந்தார். நிகில் அத்வானி டைரக்ட் செய்திருந்தார்.

இந்நிலையில் இப்போது இந்தப் படத்தை தமிழில் தாவூத் என்ற பெயரில் டப் செய்து வெளியிட இருக்கிறார்கள். பிரண்ட்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் வெளியிடுகிறது. தமிழ்நாடு முழுவதும் வருகிற பிப்ரவரி 7ந் தேதி 150 தியேட்டர்களில் ரிலீசாகிறது. சர்வதேச பயங்கரவாதி ஒருவனை இந்தியாவின் முக்கியமான ரா அதிகாரி தனது டீமுடன் சென்று கைது செய்யும் ஆக்ஷன் கதை. அந்த தேடலிலும், ஆக்ஷனிலும் முக்கிய பங்கு வகிப்பது ஒரு பாலியல் தொழிலாளி. அந்த கேரக்டரில் ஸ்ருதி ஹாசன் நடித்திருக்கிறார்.