June 25, 2021

ஸ்மார்ட் போன் விலை ஜஸ்ட் 251 மட்டுமே! – இது ஒரு இந்தியத் தயாரிப்பு

மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை ஆதரிக்கும் விதமாக உத்தரப் பிரதேச மாநிலம், நொய் டா இன்று வை தலைமை யிடமாகக் கொண்டு இயங்கிவரும் “ரிங்கிங் பெல்ஸ்’ என்ற செல்லிடப் பேசி நிறுவனம், உலகிலேயே மிகக் குறைந்த விலைக்கு (ரூ.251) தொடுதிரை செல்லிடப்பேசியை (ஸ்மார்ட்ஃ போன்) அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட் போனை www.freedom251.com என்ற இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் இந்நிறுவன வெப்சைட் முடங்கி விட்டது .
freedom-251-booking


உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் “ரிங்கிங் பெல்ஸ்’ என்ற செல்லிடப்பேசி நிறுவனம், உலகிலேயே மிகக் குறைந்த விலைக்கு (ரூ.251) தொடு திரை செல்லிடப்பேசியை (ஸ்மார்ட்ஃ போன்) அறிமுகப்படுத்தி உள்ளது.”ஃப்ரீடம் 251′ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செல்லிடப்பேசி மிகப்பெரிய புரட்சியை தொலைத்தொடர்புத் துறையில் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மலிவு விலை செல்லிடப்பேசியை பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், தில்லியில் புதன்கிழமை அறிமுகப்படுத்தினார்.

இந்த ஸ்மார்ட்ஃ போனில் உள்ள அம்சங்கள் குறித்து “ரிங்கிங் பெல்ஸ்’ நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்த செல்லிடப்பேசியில் ஆண்ட்ராய்டு மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8 ஜிபி உள்நினைவகமும் (இன்டர்னல் மெமரி), 32 ஜிபி வரை அதை நீட்டிப்பு செய்துகொள்ளும் வசதியும் உள்ளது.

பின்புற கேமரா 3.2 மெகா பிக்சல், முன்புற கேமரா 0.3 மெகா பிக்சல் வசதி இந்த செல்லிடப்பேசியில் இருக்கும். உறுதியான பேட்டரி திறனைக் கொண்டிருக்கும். இதுதவிர, மத்திய அரசின் முக்கியத் திட்டங்களுக்கான செயலிகளும் இதில் நிறுவப்பட்டிருக்கும் என்று அந்நிறுவன அதிகாரி தெரிவித்தார்.

இந்த செல்லிடப்பேசியை வாங்குவதற்கு ஆன்லைனில் வியாழக்கிழமை (பிப்.18) முதல் முன்பதிவு செய்யலாம். தற்போது, தொடுதிரை செல்லிடப்பேசிகள் ரூ.1,500 விலையில் சந்தையில் கிடைக் கின்றன. இதனிடையே “ஃப்ரீடம் 251′ செல்லிடப் பேசியை அறிமுகம் செய்வதற்கு செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனங்களின் சங்கமான “இந்தியன் செல்லுலார் அசோசியேஷன்’ (ஐசிஏ) எதிர்ப்பு தெரிவித் துள்ளது. இதுதொடர்பாக, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு அந்த சங்கம் எழுதியுள்ள கடிதத்தில், “”ஃப்ரீடம் 251′ செல்லிடப்பேசியை மானிய விலையில் விற்பனை செய்தாலும், அதன் விலை ரூ.3,500க்கும் குறைவாக இருக்கக் கூடாது; இதுகுறித்து அமைச்சர் விரிவாக ஆலோசிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.