January 18, 2022

ஸ்மார்ட்போன் நடைபாதை! – சீனா அப்டேட்

கையில் இருக்கும் போனை பார்த்துக்கொண்டே நடப்பதும், காரோட்டுவதும் நவீன கால பிரச்சனைகள். எப்போதும் ஸ்மார்ட்போனும் சாதாரன போனும் கையில் இருக்கும் பழக்கத்தின் விளைவான இந்த பிரச்சனைக்கு சீனாவில் புதிய வழி கண்டுபடித்துள்ளனர்- ஸ்மார்ட்போன் நடைபாதை தான் அது. ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே நடக்கும் பழக்கம் கொண்டவர்களுக்காக என்று சீனாவின் சாங்கியிங் (Chongqing ) நகரில் உள்ள பிரபலமான பொழுதுபோக்கு பகுதியின் நடைபாதையில் இடம் ஒதுக்கியுள்ளனர். இந்த பாதையில் 50 மீட்டர் ஸ்மார்ட்போனும் கண்ணுமாக இருப்பவர்களுகாக ஒதுக்கப்பட்டுள்ளது.
chinese-phone-lane
அருகே உள்ள 50 மீட்டரில் செல்போன் பயன்படுத்தக்கூடாது. ஸ்மார்ட்போனை பாதையில் ஆங்கிலத்திலும் சீன மொழியிலும் ,இதற்கான அறிவிப்பு நீங்களே பொறுப்பு எனும் எச்சரிக்கை பாணியில் எழுதப்பட்டுள்ளது. அருகிலேயே ,சீனாவின் முதல் செல்போன் நடைபாதை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. புதுமையான இந்த யோசனையை செல்போனை பார்த்து கொண்டே நடப்பதில் உள்ள ஆபத்தை உணர்த்துவதற்காக என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன் நேஷனல் ஜியாக்ரபிக் தொலைக்காட்சி சார்பில் அமெரிக்காவின் பின்பற்றப்பட்ட யோசனையின் உந்துதலால் இந்த திட்டம் சீனாவில் அமலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. சீனாவின் டிவிட்டரான வெய்போவில் இளசுகள் பலரும் மூழ்கி கிடப்பதும் அவர்களில் பலர் நடந்து கொண்டே குறும்பதிவு அனுப்பும் வழக்கம் கொண்டிருப்பதும் இதற்கான முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

தகவல் உதவி :http://cybersimman.wordpress.com/