September 20, 2021

ஸ்மார்ட்போன்களின் விலை இன்னும் குறையும்: சர்வே இன்ஃபர்மேசன்!

முன்பொரு காலக்கட்டத்தில் செல்போன்கள் என்றால் வசதியானவர்கள் மட்டும் உபயோகிக்கூடிய பொருள் என்ற நிலை மாறி தற்பொழுது தொழிற்போட்டியின் காரணமாகவும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் அதிக திறன் கொண்ட ஸ்மார்ட் போன்கள் மிக குறைந்த விலையில் சந்தையில் கிடைக்கின்றன. பெற்றோர்களும் விலை மலிவாக தானே இருக்கின்றது என்ற காரணத்தால் தங்களுக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ஸ்மார்ட்போன் வாங்கினால் தங்கள் பிள்ளைகளுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்கின்றனர்.தற்பொழுது வளர்ச்சி என்பது பொருளாதாரத்தை விட, வேலை வாய்ப்பை விட தொழில்நுட்பத்தை வைத்தே அதிகளவில் கணிக்கமுடிகின்றது. இன்றைய காலக்கட்டங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியில் தனக்கென்று ஓரு பங்கை ஸ்மார்ட் போன்கள் பிடித்துள்ளன.இதனால் உலக அளவில் ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சியடைந்து வரும் நிலையில் கடுமையான போட்டி காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்களின் விலை குறையும் என ஸ்மார்ட்போன் சந்தையை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஐ.டி.சி. ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2015-ஆம் ஆண்டில் சுமார் 1.5 பில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் என கணி்க்கப்பட்டுள்ளது.
smarphone price
சைனா ஸ்மார்ட்போன்களின் வரத்தும் கணிசமாக அதிகரித்து வருவதால் பிரீமியம் ஹேன்ட்செட்டுகளின் விலையும் கடுமையாக சரிந்து வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் 80 சதவீதம் ஆண்ட்ராய்டு மொபைல்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆப்பிளின் ஐ.ஓ.எஸ் 13 சதவீத்தை மட்டுமே ஆக்கிரமித்துள்ளது. எனினும், டைசன், பயர்பாக்ஸ் போன்ற புதிய ஓ.எஸ்.களும் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுதான் வருகிறது. \

அநேகமாக எல்லா முன்னணி நிறுவனங்களுமே புதிய ரகங்களை அறிமுகம் செய்திருக்கின்றன. இவற்றில் சிறந்த அறிமுகங்களைப் பட்டியலிடுவது சிக்கலானது.

ஆனால், இந்த ஆண்டின் சிறந்த ஸ்மார்ட் போன்கள் பட்டியலை மார்குவஸ் பிரவுன்லீ(Marques Brownlee) வெளியிட்டுள்ளார். இவர் கேட்ஜட் பிரியர்கள் மத்தியில் பிரபலமானவர்.

யூடியூப் மூலம் புதிய கேட்ஜட்களை விமர்சனம் செய்து வருபவர். இவரது யூடியூப் சேனலுக்குச் சந்தாதாரர்களும், செல்வாக்கும் அதிகம். பிரவுன்லீ ஒரு குறும்பதிவில் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட் போன்கள் எனத் தான் கருதுவதைக் குறிப்பிட்டுள்ளார். எச்டிசி. ஒன் எம்8, ஓன் பிளஸ் ஒன், ஐபோன் 6 பிளஸ் , சாம்சங் கேல்க்ஸி நோட் 4 மற்றும் நெக்சஸ் 6 ஆகியவற்றை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவற்றை அவர் வரிசைப்படுத்தவில்லை.

இவை எல்லாமே அளவில் பெரிய ஸ்மார்ட் போன்கள் என்பது தான் கவனிக்கத்தக்கது.

பிரவுன்லியின் யூடியூப் சேனல்: http://www.youtube.com/user/marquesbrownlee

 

தகவல் உதவி :சைபர்சிம்மன்