October 19, 2021

ஸ்பைஜெட்டில் ரூ.1000-க்கும் குறைவான விலையில் விமானப் பயணம் ! -விசேஷ சலுகை

குடியரசு தினத்தை முன்னிட்டு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் டிக்கெட் விற்பனையில் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இத் திட்டத்தின்படி உள்நாட்டிற்குள் ஒரு வழி பயணம் மேற்கொள்ள குறைந்தபட்ச விமான கட்டணம் ரூ.826 முதல் தொடங்குகிறது. சர்வதேச விமானங்களில் பயணம் செய்ய குறைந்த பட்ச கட்டணம் ரூ. 3026 ஆகும். இன்று முதல் 27ஆம் தேதி நள்ளிரவு வரை 3 நாட்களுக்கு மட்டும் இந்த சிறப்பு சலுகை திட்டம் நடை முறையில் இருக்கும் என்று ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது. இத் திட்டம் மூலம் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணம் மேற்கொள்ளலாம்.நேரடி விமான சேவை கொண்ட வழித்தடங்களுக்கு மட்டும் இந்த சிறப்பு சலுகை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

spcijet jan 29

இதுகுறித்து டிராவல்ஸ் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், “உதாரணமா சொல்லணும் னா தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை செல்லும் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் பயணிகளுக்கும் இந்த புதிய சலுகையை அறிவித் துள்ளது. இதன் மூலம் சென்னைக்கு விமான கட்டணம் ரூ. 1428 மட்டுமே. சேவைக் கட்டணத்துடன் சேர்ந்து ரூ.1600 மட்டும் வசூலிக்கப் படும். வழக்கமான கட்டணம் ரூ.3000 ஆகும்.கடந்த 25ம் தேதி அறிவிக்கப்பட்ட இச்சலுகையானது 28ம் தேதி வரை நீடிக்கப் பட்டுள்ளது. பிப்.1 முதல் ஏப். 2ம் தேதி வரை பயணம் செய்ய விரும்புவர்கள் இந்த சலுகை கட்டணத்தில் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். இந்த கட்டண சலுகையானது குறிப் பிட்ட இருக்கைகளுக்கு மட்டுமே உள்ளது. மேலும் விபரங்களுக்கு 9842181878, 8883503000 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.

மேலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் www.spicejet.com, ஸ்பைஸ்ஜெட் மொபைல் அப் மற்றும் ஸ்பைஸ்ஜெட் முகவர்களை அணுகலாமாம்.