September 29, 2021

ஸ்டீராய்ட் பயன்படுத்தி இளமையை காட்டி கொள்வோர் அதிகரிப்பு ! – இங்கிலாந்து பகீர்

ஸ்டீராய்டு மருந்துகள் ஒரு கத்தியைப் போன்றது. இதை நல்லவிதமாகவு மட்டுமின்றி கெட்ட விதமாகவும் பயன்படுத்தலாம். நம் உடலுக்குள்ளேயே அட்ரீனல் என்ற ஸ்டீராய்டு சுரப்பி உள்ளது. நாம் மிகுந்த உடல்நலக் குறைவுடன் இருந்தாலும், மனஅழுத்த நோயுடன் இருந்தாலும் நம் உடம்பிற்கு அதிக ஸ்டீராய்டு தேவைப்படுகிறது. இதனால் அட்ரீனல் சுரப்பி அதிக ஸ்டீராய்டை சுரக்கிறது.ஒரு நோயாளி தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும்போது இயற்கையாக எவ்வளவு ஸ்டீராய்டு சுரக்கிறது என ஆராய்ந்து பற்றாக்குறை இருந்தால் ஸ்டீராய்டு மருந்து கொடுக்கின்றனர்.இந்நிலையில் இளமையாக காட்டி கொள்ள உலகம் முழுவதும் ஸ்டீராய்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று இங்கிலாந்து தேசிய சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
Steroids-alert

  • ங்கிலாந்து தேசிய சுகாதார அமைப்பு, ஸ்டீராய்ட் பயன்படுத்துவோர் பற்றி ஆய்வு நடத்தியது. அதில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்ததால், புதிய வழிகாட்டி நெறிமுறைகளை கொண்டு வந்துள்ளது. ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது:இங்கிலாந்தில் ஸ்டீராய்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. 16 முதல் 59 வயதுடைய சுமார் 60,000 பேர் ஸ்டீராய்ட் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. இளமை மற்றும் தோற்றம், அழகை பராமரிக்க இத்தகைய ஊசிகளை போட்டு கொள்கினறனர். கடந்த 2010ல் ஸ்டீராய்ட் ஊசி போட்டு கொண்டவர்களின் எண்ணிக்கை 290 ஆக இருந்தது.

    இந்த எண்ணிக்கை 2013ல் 2,161 ஆக அதிகரித்துள்ளது. ஸ்டீராய்ட் ஊசிகளை பயன்படுத்துவோர் அதை முறையாக பயன்படுத்துவதில்லை. சுகாதாரமற்ற ஊசிகளின் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இந்த ஊசியால் பக்க விளைவுகள் ஏற்படும். உயிருக்கே ஆபத்தாக முடியும். குறிப்பாக ஒரே ஊசியை பலர் பயன்படுத்துவதும், பல முறை பயன்படுத்துவதும் உயிர் கொல்லி நோய்களான எய்ட்ஸ், ஹெபடிடிஸ் பி மற்றும் சி வகை மஞ்சள் காமாலை, ரத்த சம்பந்தமான இதர உயிர்க் கொல்லி நோய்கள், முகப்பரு மற்றும் தோல் சம்பந்தமான நோய்கள், முடி உதிர்தல், ஆண்களுக்கு டெஸ்டிகிள் சுருங்குதல், குழந்தையின்மை, நுரையீரல் மற்றும் இதய சம்பந்தமான பல்வேறு நோய்களுக்கு அடித்தளமாக அமையும்.

    எனவே ஸ்டீராய்டுகளுக்கு அடிமையாகும் பழக்கத்தில் இருந்து இளைய சமுதாயம் உடனடியாக காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு ஊசி பயன்படுத்தும் முறை, தேவையற்ற மருந்துகளால் ஏற்படும் பாதிப்புகள், மருத்துவ அறிவுரையின் பேரில் மட்டுமே இவற்றை பயன்படுத்துவதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.