October 16, 2021

வை – பை போய் லை – பை வரப் போகுது டும்! டும்!! டும்!!! – வீடியோ

இணைய தளத்தில் வயர் இணைப்பு இல்லாமல் பயன்படுத்துவதற்காக ‘வை–பை’ என்ற தொழில் நுட்பம் உள்ளது. இதை பயன்படுத்தி குறிப்பிட்ட தூரம் வரை வயர் இணைப்பு இல்லாமல் கம்ப் யூட்டர், செல்போன், லேப்–டாப், லேப்லெட் போன்ற சாதனங்களில் இணையதள வசதிகளை பெற முடியும். ஆனாலும் ‘வை–பை’ மூலம் தகவல் களை பதிவிறக்கம் செய்வதற்கு கஷ்டமாக இருக்கும்.

tec nov 28

ரேடியோ அலைகளுக்குப் பதிலாக, விளக்கொளி மூலம், தற்போது நாம் பயன்படுத்தி வரும் வை-ஃபை இண்டர்நெட் வேகத்தைவிட 100 மடங்கு அதிக வேகம் கொண்ட ‘லை-ஃபை’ (லைட் பெடி லெட்டி) எனும் புதிய தொழில் நுட்பத் தை வெற்றிகரமாக சோதனையை சீன விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செய்துள்ளனர் இந்த லை-பை இணையத்தின் வேகமானது நாம் இன்று பயன் படுத்தும் வை-பையின் வேகத்தினை விட 100 மடங்கு அதி வேகமாம்.இதனால் நொடிக்கு 224GB வேகத்தினைக் கொடுக்கக் கூடியது. அதாவது லை-பை அல்லது லைட் பிடிலிட்டி என்று சொல்லப் படுகின்ற ஒளி விசுவாசத்தினைக் கொண்டு கண் இமைப்பதற்குள் 18 திரைப்படங்களை ஒரே நேரத்தில் டவுண்லோடு செய்து கொள்ளக் கூடிய அளவிற்கு பன்மடங்கு அதி வேகமானதாம். இப்போதைக்கு இதனை உலகில் சில இடங்களில் சோதனை முன்னோட்டம் பார்ப்பதற்காக உலவ விட்டுள்ளனர்.

வை பை மாதிரியே லை-பை யையும் அனைத்து அலுவலகங்களிலும் வீட்டிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இந்த அதிவேக திறன் கொண்ட லை-பையினை இன்னும் நான்கு அல்லது ஐந்து வருடங்களில் உலகம் முழுக்க அறிமுகபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வீடியோ பார்க்க:

இதன் நன்மைகள்

1. ஒளி மூலமே கடத்த படுவதால் ஒரு குறிப்பிட்டி சுவற்றை தாண்டாது. ஆகவே இழப்பினை குறைக்கலாம்.

2. ரேடியோ அலைகள் பாதிப்பிலாத காரணத்தினால் தண்ணீருக்கு அடியில், விமானத்தில் கூட பயன்படுத்தலாம்.

3. வேகம் அதிகம்

குறைந்தது 4 பேராவது ஒரே நேரத்தில் பயன்பட கூடிய வகையில் இது தயாரிக்க பட்டுலதாக மேலும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.