October 16, 2021

‘வைஃபை’ -இலவச சேவை !- பெங்களூர் சாலைகளில் அறிமுகம்!!

பொது இடங்களில் மக்கள் இணையதள வசதியை பயன்படுத்தும் வகையில் இலவச ‘வைபை’ திட்டத்தை இந்தியாவிலேயே முதல்முறையாக கர்நாடக அரசு பெங்களூரில் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக பெங்களூரில் 5 இடங்களில் இத்திட்டத்தை மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல் நேற்று தொடங்கி வைத்தார்.முக்கியமான 5 இடங்களில் இலவச ‘வைபை’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி எம்.ஜி. ரோடு, மெட்ரோ ரயில் நிலையம், பிரிகேட் ரோடு, இந்திரா நகர், கோரமங்களா ஆகிய இடங்களில் இலவசமாக இணையதள வசதியைப் பயன்படுத்தலாம்.
jan 25 -freewifi
பொது இடங்களில் மக்கள் இணையதள வசதியை பயன்படுத்தும் வகையில் இலவச ‘வைஃபை’ திட்டத்தை இந்தியாவிலேயே முதல்முறையாக கர்நாடக அரசு பெங்களூரில் தொடங்கியுள்ளது. இத்திட்டத்துக்கு ‘நம்ம வைஃபை’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.முதல் கட்டமாக பெங்களூரில் 5 இடங்களில் இத்திட்டத்தை மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல் நேற்று தொடங்கி வைத்தார்.

பெங்களூர் மகாத்மா காந்திசாலையில் (எம்.ஜி. ரோடு) ‘நம்ம‌ வைஃபை’ திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல் பேசுகையில், ”இந்தியாவின் ஐடி தலைநகரமாகவும், சிலிக் கான் சிட்டியாகவும் திகழும் பெங்களூரில், பொதுமக்கள் அதிகளவில் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். இந்தியாவிலே இணையதளம் மூலம் அதிக சேவைகளை பெறுவதிலும் பெங்களூர்வாசிகள் முன்னணியில் இருக்கிறார்கள். அலுவலகத்திலும் வீட்டிலும் மட்டுமில்லாமல் பொது இடங்களி லும் அவர்களுக்கு இணையதள வசதி கிடைக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையாவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

எனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் சித்தராமையா இதற்கான ஆணையை வழங்கினார். முக்கியமான 5 இடங்களில் இலவச ‘வை-ஃபை’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி எம்.ஜி. ரோடு, மெட்ரோ ரயில் நிலையம், பிரிகேட் ரோடு, இந்திரா நகர், கோரமங்களா ஆகிய இடங்களில் இலவசமாக இணையதள வசதியைப் பயன்படுத்தலாம்.
இந்த இணைய சேவைத் திட்டம் ஓரிரு ஆண்டு களில் மைசூர், ஹூப்ளி, மங்களூர் என கர்நாடகா முழுவதும் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் கர்நாடகாவின் இளை ஞர்களும் பொதுமக்களும் தகவல் தொழில் நுட்ப துறை யின் வளர்ச்சிப்பாதையில் பயணிப் பார்கள்’ ‘என்றார்.

மேலும் இந்த வசதியின் மூலம் ஒரு நாளில் வாடிக்கையாளர்கள் ஒருவர் மூன்று மணி நேரம் இணையதளத்தை இலவசமாக ’வைபை மூலம் பயன்படுத்தி கொள்ளலாம்.அதேபோல் 50 எம்பி தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டத்தை மேலும் 10 இடங்களுக்கு விரிவாக்கம் செய்ய கர்நாடக ஐடி துறை திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தை பாதுக்கப்பாக பயன்படுத்துவது பற்றியும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் இணையத்தை பயன்படுத்துவோர் யார் என்பதை சர்வர் மூலம் கண்காணிக்கப்படும் மேலும் எந்த கருவியின் மூலம் பயன்படுத்துகிறது என்பதையும் கண்காணிக்கப்படுவதால் முற்றிலும் பாதுகாப்பானது என்று கர்நாடக அரசின் தகவல் தொழிநுட்பத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Get Wi-Fi for free in Bangalore
*************************************************
Next time you are on MG Road, you can browse for three hours free of cost. The much-awaited free wifi service, Namma Wi-Fi, was launched by the department of In­fo­rm­ation Technology, Bio­tec­hnology, and Science and Tec­hn­ology, on Friday. Us­ers can now log on to free in­ternet in the wifi hot­spots in Bri­gade Road, MG Road, CMH Road and Sha­ntinagar, Yes­hw­­antpur and Kor­ama­ngala bus statio­ns.