September 18, 2021

வேட்பாளர் விவரங்கள் தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி

சொத்து மதிப்பு, குற்ற வழக்கில் கைது, தண்டனை, நிலுவையில் உள்ள வழக்குகள் போன்ற முக்கியமான விவரங்களை வேட்புமனு தாக்கல் செய்யும்போது பல வேட்பாளர்கள் தெரிவிக்காமல் மறைத்துவிடுவதால் தேர்தல் ஆணையம் அதிரடியான முடிவை எடுத்திருக்கிறது.இந்த விவரங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் பதிவு செய்து, அதன் காகித நகல்களை வேட்புமனுவுடன் இணைத்து தாக்கல் செய்ய வேண்டும் என புதிய வழிமுறையை ஆணையம் அறிமுகம் செய்கிறது.
E-voting 24
மேற்கண்ட விவரங்கள் குறித்த ஏதேனும் ஒரு கேள்விக்கு ஆன்லைனில் பதிலை பதிவு செய்ய தவறினாலும் அடுத்த கேள்விக்கு போக முடியாது. எனவே விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய இயலாது. அவ்வாறு வேட்பாளர் பதிவு செய்த தகவலில் தவறு அல்லது முறைகேடு இருப்பதாகவோ, உண்மைகள் மறைக்கப்பட்டதாகவோ பின்னர் தெரிய வந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட எம்.பி அல்லது எம்.எல்.ஏ.வின் பதவி பறிக்கப்படும். அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் வழங்கப்படலாம். இதற்கான அதிகாரத்தை வரும் தேர்தலுக்கு முன்னதாக தனக்கு வழங்குமாறு அரசிடம் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஊழலுக்கும் முறைகேடுகளுக்கும் எதிராக நாட்டில் நிலவும் எதிர்ப்பை கருத்தில் கொண்டு அரசு அந்த அதிகாரத்தை விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது தங்களது கல்வித்தகுதி, அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிப்பார்கள். இதில் வேட்பாளர்கள் சில விவரங்களை தெரிவிக்காமலோ, அல்லது தவறான தகவல் அளிக்கவோ வாய்ப்பு உள்ளது.

இதை தடுக்கும் வகையில், ஆன்-லைன் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்யும் திட்டத்தை கொண்டுவர தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, ஆன்லைனில் வருமானவரி கணக்கு தாக்கல் செய்வது போன்று வேட்பு மனுவையும் தாக்கல் செய்ய வசதி செய்யப்படும். வேட்பாளரின் பெயர், சொத்து விவரம் உள்ளிட்ட அனைத்தையும் பெறும் வகையில்

ஆன்லைன் படிவம் கொடுக்கப்பட்டிருக்கும். இதை வேட்பாளர் பூர்த்தி செய்து கொண்டே வரவேண்டும். ஒரு பக்கத்தில் கேட்கப்பட்ட அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்யாமல் அடுத்த பக்கத்துக்கு செல்ல முடியாது. இறுதியாக அவற்றை பிரதி எடுத்து, அதை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும்.வேட்பாளர் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து முடித்ததும், இந்த தகவல்களை பொதுமக்கள் உடனடியாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பார்க்கலாம். இதில் தகவல் எதுவும் விடுபட்டிருந்தால் அதுபற்றி தேர்தல் ஆணையத்துக்கு யார் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். இதன்மூலம், வேட்பாளர் தவறான தகவல் கொடுத்திருப்பது உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும்.

தவறான தகவல் அளிப்பவர்களை தகுதியிழக்க செய்வது மற்றும் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் அதிகாரத்தை தேர்தல் கமிஷனுக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.இணையதளம் மூலம் தகவல் பதிவு செய்யும் வசதி முதலில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் அறிமுகப்படுத்தப்படும். மற்ற மொழிகளில் பின்னர் விரிவுபடுத்தப்படும். இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் கூறுகையில், ‘இணைய தளம் மூலம் வேட்பாளர் விவரம் பதிவு செய்யும் முறையை முதற்கட்டமாக வெற்றிகரமாக சோதனை செய்துள்ளோம். தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழுவினர் இதை நடைமுறைப்படுத்துவது பற்றி மேலும் ஆராய்ந்து வருகிறார்கள். அடுத்த ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் இந்த முறையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்‘ என்றார்.

EC asks govt for powers to disqualify candidates
************************************************************
The Election Commission (EC) has recommended immediate disqualification and imprisonment of up to two years of candidates providing false information in affidavits to be submitted ahead of elections.