October 18, 2021

வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணத்திற்கு சேவை வரியா?

வழக்கம் போல எல்லோரும் விஷயம் புரியாம ஷேர் செய்ய ஆரம்பித்தது தான் சேவை வரி. 12:36% காசு புடிச்சா என்னாகுறது என் வாழ்க்கை மோடி வேலையை காட்டிட்டாரேன்னு அவர் அவர் தன் வசதிக்கு புலம்ப – உண்மையான விஷயம் இதுதான். 12:36% சேவை வரி உண்டு ஆனா நீங்கள் அனுப்பும் பணத்திற்க்கு அல்ல. அதாவது விவரமாய் கூறுகிறேன் கேளுங்கள்.
ravi tax
நீங்கள் பத்தாயிரம் ரூபாய் (10,000) இந்தியாவுக்கு வங்கி வழியாகவோ, மணி சேஞ்சர் மூலமாகவோ – விரைவு ஆன்லைன் ரெமிட்டன்ஸ் , வெஸ்டர்ன் யூனியன் மற்றும் மனிகிராம் போன்ற இந்த சேவை நிறுவனங்கள் ஒரு தொகையை கமிஷனாக வசூலீக்கின்றன. உதாரணத்திற்க்கு துபாயில் இந்த பத்தாயிரம் ரூபாயை நீங்கள் அனுப்பும் போது 5 திராம் கமிஷன் அல்லது ஃபீஸ் அல்லது சர்வீஸ் சார்ஜ் பெற்று கொள்வார்கள் அல்லவா? அந்த 5 திராம் பணத்தில் நீங்கள் 12,36% சதவிகிதம் 0,62 காசுகள் தான் அரசாங்கத்திர்க்கு செலுத்த வேண்டும். பலர் அந்த பத்தாயிரத்தில் 1236 ரூபாய் கட் பன்னுவாங்கன்னு ஒரு புரளியை எக்ஸ்ட்ரா ஷிஃப்ட் போட்டு தீயாய் பரவ வைப்பது 100% பொய். அதனால் யாரும் பீதி அடைய வேண்டாம்.

இது இன்று நேற்று அறிமுகபடுத்தவில்லை – 2012ல் அறிமுகபடுத்தி பின்பு அதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்ட காங்கிரஸ் அரசு அதை இன்று அரசியல் ஆக்குவது நியாயம் இல்லாத ஒன்று. இதுவும் வழக்கம் போல நம்மூர் பிசி சிதம்பரத்தின் இன்னொரு ஐடியா மணி திங்கிங் தான். அது போக இது அறிமுகபடுத்தப்பட்டாலும் உங்களிடம் நிறுவனங்கள் வசூலிப்பது மிக அரிது ஏன் எனில் இனிமேல் தான் போட்டி உருவாகி ஃபிளாட் சார்ஜ் வகையில் கமிஷன் கட்டணம் வரும்