September 20, 2021

வெங்காயம் விலை விர்..ர்..ர்!!!

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 100 ரூபாயை நெருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்காயத்தை சீனா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யலாமா என மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மற்றொரு நடவடிக்கையாக வெங்காய ஏற்றுமதியை தடை செய்வது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
22 - onion
கடந்த ஓரிரு வாரங்களாக இலேசாக குறைந்திருந்த வெங்காயத்தின் விலை, தற்போது மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. சென்னையில் கிலோ ரூ. 70, டெல்லியில் 90, சண்டிகர் மற்றும் போபாலில் 80 என விற்பனை செய்யப்படுகிறது. பெங்களூரில் மட்டும்தான் ஓரளவு குறைவாக கிலோ ரூ. 60 க்கு விற்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் மாதம் ஒன்றுக்கு 9 முதல் 10 லட்சம் டன் வெங்காயம் தேவையாக உள்ள நிலையில், அதில் பாதி அளவுதான் வெங்காய சப்ளை உள்ளதாகவும், இதனால்தான் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதாகவும் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் மற்றொரு நடவடிக்கையாக வெங்காய ஏற்றுமதியை தடை செய்வது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Government may ban onion exports to check price rise
**************************************************************
The government is mulling banning onion exports to contain prices, which have risen back to the Rs 80-90/kg level in the national capital owing to supply crunch.