October 16, 2021

வீட்டில் கழிவறை வசதி இல்லையா?தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை! – குஜராத் முடிவு

குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல்களில் போட்டியிட விரும்புபவர்கள், இனி தங்களது வீட்டில் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யவேண்டும், இல்லையென்றால் அவர்கள் போட்டியிட முடியாது.
gujrat
குஜராத் உள்ளுராட்சி சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2014 குஜராத் சட்டமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. சட்டத்தில் செய்யப்பட்ட புதிய திருத்தத்தின் பிரகாரம், குஜராத்தில், மாவட்டம், தாலுகா, கிராமம், பஞ்சாயத்து, மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் கட்டாயம் வீட்டில் கழிவறை அமைத்திருக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தங்களது வீட்டில் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது என்று உறுதி செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் மசோதாவை ஓட்டெடுப்புக்கு விட்ட, மாநில சாலை மற்றும் கட்டிடம் அமைச்சர் நிதின் படேல், யார் தேர்தலில் போட்டியிட விரும்புகிறீர்களோ அவர்கள் கழிவறை வசதி குறித்தும் அபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார்.

“தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களில், யார் வீட்டில் கழிவறை வசதி இல்லையோ அவர்கள் வருகிற மாநில உள்ளாட்சி, மாநகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது. ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களது வீட்டில் கழிவறை வசதி அமைக்கப்பட்டுள்ளது என்ற சான்றிதழை 6 மாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்,” என்று நிதின் படேல் சட்டசபையில் கூறினார். மசோதாவில் மேலும் இரண்டு திருத்தங்கள் முன்மொழியப்படது.

காலியாக இருக்கும் மாநகராட்சிக்கு ஆறு மாதங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்(முன்னதாக மூன்று மாதங்களாக இருந்தது.) என்றும் கிராமம் என்று அறிவிக்க குறிப்பிட்ட பகுதியில் மக்கள் தொகை 25 ஆயிரமாக இருக்க வேண்டும்(முன்னதாக 15 ஆயிரமாக இருந்தது. என்றும் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் மசோதா குரல் வாக்கு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.