September 20, 2021

வீக்லி டுவைஸ் (மட்டும்) பீர் சாப்பிட்டு வந்தால், ஹார்ட் பிராஃப்ளம் வர 30% கம்மி!

மதுவகைகளில் ஒன்றான பீரை நிறைய பேர் மதுவகையில் சேர்ப்பதில்லை. பீரில் ஆல்கஹாலின் அளவு மிகக் குறைவாக இருப்பதால், அது உடலுக்கு கெடுதல் செய்யாது, மாறாக உடலுக்கு நல்லது செய்யும் பானம் என்று பரவலாக பேசப்படுகிறது. ஆனால் மருத்துவ நிபுணர்களும், உணவியல் வல்லுநர்களும் இந்தக் கூற்றை ஏற்றுக் கொள்வதில்லை.மதுபானங்களுக்கு என்னென்ன குணங்கள் உண்டோ அத்தனையும் பீரில் உண்டு என்கிறார்கள். இந்தியாவைப் பொருத்தவரை, வடஇந்தியாவை சேர்ந்த சில பெண்களிடையே பீர் குடிக்கும் பழக்கம் இருக்கிறது. மிகப் பெரிய நகரங்களில் பள்ளி மாணவர்கள் கூட பீர் குடிக்கிறார்கள். இதற்கு அடிப்படை காரணம் பீர் கெடுதல் இல்லை என்ற தவறான கருத்துதான். இந்த நிலையில் வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் பீர் சாப்பிட்டு வந்தால், இதயநோய்க்கான வாய்ப்பு 30 சதவீதம் வரை குறையும் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த சோதனை பெண்களிடையே நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
beer 2
முன்னதாக ஸ்வீடனில் நடந்த ஒரு ஆராய்ச்சி முடிவில் வாரத்தில் இரண்டு நாட்கள் பீர் குடிக்கும் பெண்களுக்கு மற்ற பெண்களை விட மாரடைப்பு வரம் சாத்தியம் 30 சதவிகிதம் குறைவு என்றது 50 வருடமாக 1500 பெண்களை வைத்து கொதென்பெர்க் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த சாஹ்க் ரென்ஸ்கா அகாதெமி அந்த ஆராய்ச்சியை சிரமேற்கொண்டு செய்தது. அதன் முடிவில் பீர் குடிப்பது பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கிறது எனக் கண்டுபிடித்துள்ளனர்.

‘இதற்கு முன்னர் நடந்த சில ஆராய்ச்சிகளின் முடிவும் கூட குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் உடம்பில் சேர்ந்தால் அது பல நோய்களை வரும் முன்னாலேயே பாதுகாக்கும் என்றது. எங்களுடைய ஆராய்ச்சியைப் பொருத்தவரையில், இதயம் சம்மந்தப்பட்ட பிரச்னைகளை மட்டுமே ஆராய்ச்சி செய்தோம்’ என்றார் அகாதெமியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாமினிக் ஹாங்கே.அதே சமயம் மேலும் குறிப்பிட்ட அளவு வைன் அருந்துவதாலும் இதே பலன் கிடைக்குமா என்று தெரியவில்லை. அந்த ஆராய்ச்சியையும் மேற்கொண்டு அதன் முடிவுகளையும் இதில் சேர்க்க வேண்டும் என்றார்.

இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள, 1968 -ஆண்டிலிருந்து 2000-ம் ஆண்டு வரை மத்திய வயது பெண்களை சோதனை செய்ய ஆரம்பித்தார்கள் (ஆராய்ச்சி முடிவின் போது அவர்களின் வயது தோராயமாக 70 லிருந்து 92 வரை). இந்தப் பெண்கள் பீர், வைன், அல்லது வேறுவகை மது என்று எதைக் குடித்தாலும் வாரத்தில் எத்தனை நாட்கள் குடித்தார்கள், எவ்வளவு குடித்தார்கள் என்பதை கணக்கில் வைக்க அறிவுறத்தப்பட்டார்கள்.

32 வருட தொடர் கண்காணிப்புக்கு பிறகு இதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. 185 பெண்களுக்கு மாரடைப்பு, 162 பெண்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் 345 பெண்களுக்கு புற்றுநோய் தாக்கி இருந்தது.இந்த பிரச்னைகள் ஏற்பட்ட பெண்கள் ஸ்ப்ரிட் எனப்படும் மதுபானங்கள் அருந்தி யவர்கள. அவர்கள் அதிக அளவு இதைக் குடித்துள்ளனர். ஆனால் பீர் குடித்தவர்கள் அதுவும் குறைவாக வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் அளவாக குடித்தவர்களுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை.

இந்த ஆராய்ச்சி ‘ஸ்காண்டினேவியன் ஜர்னல் ஆஃப் ப்ரைமரி ஹெல்த் கேர’ என்ற பத்திரிகையில் வெளியானது. இதனிடையேதான் வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் பீர் சாப்பிட்டு வந்தால், இதயநோய்க்கான வாய்ப்பு 30 சதவீதம் வரை குறையும் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த சோதனை பெண்களிடையே நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.