September 17, 2021

விவசாயிகளுக்காக நாஸா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள நவீன சாட்டிலைட்!

எந்த ஒரு விஞ்ஞாமும் பாமரனுக்கு சென்று சேர்ந்தால் தான் அது உண்மையான கண்டுப்பிடிப்பு என்பதை நான் அடிக்கடி வலியுறுத்தி இருக்கிறேன் இதைக் கவனத்தில் கொண்டு இப்போது நாஸா விஞ்ஞானிகள் விவசாயிகளுக்காகவே ஒரு புது சாட்டிலைட்டை கண்டுப் பிடித்துள்ளனர். இது மேலே வான் வெளியில் பறந்து கொண்டே பூமியில் எங்கெல்லாம் நீர் பிடிப்பு இருக்கிறது மற்றும் எந்த எந்த இடத்தில் மண்ணில் ஈரம் இருக்கிறது என்பதை மிக துல்லியமாக காட்டும்.
ravi jan 8
பல இடங்களில் வறன்ட பூமி இருக்கும் அதை விவசாயிகள் இங்கே பயிர் செய்ய முடியாது என விட்டு விடுவார்கள் வருஷா வருஷமாய். ஆனால் இந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர் எத்தகைய வறண்ட பூமியிலும் கன்டிப்பாய் நீர் ஆதாரம் இருக்கும் அதனை கண்டுப்பிடிக்காமல் அந்த பூமியை பாழ்படுத்திவிடுகின்றனர். ஆனால் 100 ஹெக்டார் நிலத்தில் கண்டிப்பாய் 20 – 30 ஹெக்டார் அளவுக்கு நீர் இருக்குமாம் அந்த இடத்தில் விவசாயம் செய்தால் நன்கு வளரக்கூடிய வாய்ப்புகள் உண்டாம் – அதனால் தான் இந்த கண்டுபிடிப்பாம்.

இதை முதலில் அமெரிக்காவில் இருக்கும் கோடிக்கணக்கான ஏக்கரை ஸ்கேன் செய்து விவசாயிகளுக்கு இந்த இந்த இடத்தில் விவசாயம் செய்ய முடியும் என அறிவிக்க போகிறார்களாம் இதன் மூலம் பல லட்ச ஏக்கர்கள் பயன் அடையுமாம். இதே மாதிரி ஒரு சாட்டிலைட்டை இந்தியாவும் விட்டால் நமக்கு தெரியாத பல நீர் ஆதார பூமிகளை கண்டறிந்து அதன் மூலம் விவசாயம் செய்ய முடியும் என்பது மட்டும் இல்லையாம்.

இது நஞ்சை – இது புஞ்சை இங்க வளராதுனு விட்ட பல நிலங்கள் அதே தன்மையை கொண்டது இல்லையாம் – பல கிளைமாட்டிக்கள் சேஞ்சஸ் இருப்பதால் கண்டிபபாய் பாலைவனத்தில் கூட 6 முதல் 10 வருஷத்தில் நிலத்தடி நீர் ஆதாரம் மாறிக் கொண்டே இருக்குமாம். இதனால் சீக்கிரம் இந்தியாவும் இந்த வகையில ஒரு சாட்டிலைட் வுட்டா நல்லது – இன்னொரு மகிழ்ச்சி செய்தி மார்ச் 15 முதல் இந்தியாவின் சொந்த நேவிகேஷனல் ஜிபிஎஸ் வேலை செய்ய போகுது – அப்புறம் ம்முப்ப்ப்ப்பாஆஆத்ஹ்ஹ்ஹ்ஹா ரொவுடு என்னும் கூகுள் மேபின் தமிழ் கொலை இல்லாமல் முப்பாத்தாம்மன் சாலைக்கு வலது பக்கம் திரும்பவும்னு சொல்லும் தேசி ஜி பி எஸ்.

நாஸா விஞ்ஞானிகளே ஒரு உண்மையை சொல்லுங்க – நீங்க கத்தி படத்தில இரண்டு அலுமுனிய போனி சட்டி மற்றும் பழைய டிரான்ஸிஸ்டர் கம்பி ஏரியல் – ஒரு முப்பது ரூபா ஹெட்ஃபோன் போட்டு தண்ணீர் தடத்தின் டி டி எஸ் / டால்பி சவுண்டை இட்லி தத்துவத்தோட விசய் சொன்னதை தானே நீங்க காப்பி அடிச்சி தானே இந்த சாட்டிலைட் செஞ்சீங்க…………ஏம்ப்பா அவன்ங்களே காப்பி அடிச்சி படம் எடுத்தாங்க நீங்க அதை காப்பி அடிச்சி…………………..ஏன்ப்பா நீங்களே இப்படி செய்றீங்களேப்பா …………..இருங்க மீஞ்சூர் கோபியை விட்டு கேஸ் போடச்சொல்றேன்.!

NASA’s new tech to trace water resources..……..