October 20, 2021

விருதுகளை அள்ளியதில் ஆச்சர்யம் இல்லை! – ”விசாரணை” திரை விமர்சனம்

திடீர்னு உங்களுக்கு ஒரு போன் வருது..” போலீஸ் பேசுறோம் சின்னதா ஒரு  ”விசார ணை”.. . ஸ்டேஷன் வரைக்கும் வரணும்னு’ யாராவது விளையாட்டா சொன்னாகூட வயித்துல புளி கரைவது நிச்சயம்… அ ந்தளவுக்கு போலீஸ் டெரர் முகத்தை அப்பட்டமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்…தமிழ் சினிமா ஆரம்பம் தொட்டு பல போலீஸ் கதைகளை கையாண்டிருக்கிறது… படங்களாக பதிவு செய்து வெற்றிகளும், தோல்விகளையும் பார்த்து இருக்கிறது.
visaranai feb 5
அதில் எல்லாவற்றிலும் இருந்து முற்றிலும் மாறுபட்டு போலீஸ் எப்போதும் “போலி”ஸ் ஆகவே இருக்கிறார்கள். எப்போதாவதுதான் போலீஸ் ஆகிறார்கள் என்பதை பொட்டில் அறை ந்தது போல சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

சரி கதைக்கு வருவோம்.
..

ஊரில் சின்ன பிரச்சனை வேறு மாநிலம் ஓடிவரும் சிலர் பார்க்கில் படுத்துறங்க… அங் குள்ள கடையில் வேலை பார்த்து வரும் தினேஷையும் சேர்த்து 4 பேரை திடீர் என வரும் போலீஸ் அள்ளிக் கொண்டு போகிறது. காரணமே சொல்லாமல் 4 பேரையும் அடித்து துவைக்கிறது போலீஸ்… அடிக்கும் போது ‘னா நாங்க தான் செய்தோம்னு ஒத்துக்குங்க… ஒத்துக்குங்க…’ என சொல்லி சொல்லி அடிக்கிறார்கள்… அடிவாங்கும் 4 பேருக்கும் அடி வாங்கும் வலியை விட ‘எதை ஒத்துக்க” சொல்றாங்கன்னே தெரியம போறதால அவர்கள் அலறல் சத்தம் அடிவயிற்றில் அமிலம் சுரக்க வைக்கிறது…

அப்புறம் தான் தெரிகிறது… செய்யாத திருட்டை நம் தலையில் கட்டப்போகிறார்கள் என்று. மரண அடி விழுந்தும் செய்யாத திருட்டை ஒப்புக்கொள்ள முடியாது என்று சாதிக் கிறது இந்த அப்பாவி டீம்… எப்படியாவது அவர்களை ஒப்புக்கொள்ள வைக்க வித வித மான டெக்னிக்குகளில் அடித்து துவைக்கிறது போலீஸ்… தலைகீழாக கட்டி பிரித்து மேயும் போதும் செய்யாத தப்பை ஏற்க மறுக்கிறார்கள். தினேஷ் ஐடியா படி லாக்கப் புக்குள் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

இதில் பதறிப்போகும் போலீஸ் அவர்களை விடுவித்து வெளியே அனுப்புகிறது… கூடவே போலீஸ் ஸ்டேஷன் எதிரில் இருக்கும் ஓட்டலில் வேண்டியதை சாப்பிட்டு வந்து கையெழுத்து போட்டு விட்டு போக சொல்கிறது. 4 பேரும் உண்ணாவிரதம் இருந்தது பலன் தந்ததால் விடுதலை ஆகிறோம் என சொல்லி சந்தோஷத்தோடே ”புல்” கட்டு கட்டுகிறார்கள். வயிறு முட்ட சாப்பிட்டு கையெழுத்து போட ஸ்டேஷன் வரும் நால் வரையும்… ஸ்டேஷனுக்குள் தள்ளி …. போலீஸ் மீண்டும் அடித்து துவைக்கும் போது … உண்ணாவிரதத்தை முடிக்க போலீஸ் போட்ட குரூர விடுதலை நாடகம் என்பது வெளிச்சத்துக்கு வர… பார்க்கிறவர்கள் ஈரக்குலை நடுக்குகிறது!.

எப்படியோ வேறு வழக்கிற்கு வரும் தமிழக போலீஸ் அதிகாரி சமுத்திரகனி மூலம் அவர்கள் விடுதலை ஆகிறார்கள். ஒரு முறை போலீஸ் பிடியில் சிக்கி மீண்டாலும் விடாது கருப்பு போல விதி விளையாட… தங்களை விடுதலை … செய்த சமுத்திரகனி கேட்கும் உதவியை செய்யப்போய் தினேஷும் மற்றவர்களும் என்ன ஆகிறார்கள் என்பதே விசாரணை படம்.

இருட்டு லாக்கப்… அதில் நடக்கும் கொடூரங்கள்… மரணங்கள்… தலைகீழாக கட்டி அடித்து துவைத்து அவர்கள் காலில் ரத்தம் கட்டாமல் இருக்க அவர்களை கட்டவிழ்த்து ஓட விட்டு நார்மல் ஆனதும் மீண்டும் தலைகீழாக கட்டி அடித்து துவைக்கும் காட்சிகள் போலீஸ் குரூரங்களை வெளிச்சம் போடுகிறது. சபாஷ் வெற்றிமாறன்.

படம் தொடங்கி ஓட ஆரம்பித்து முடியும் வரை, சீட்டில் அமர்ந்திருக்கிற அனைவருக்கும் இனம் புரியாத பயம்… பீதி… உச்சி மண்டையில் இறங்கி, முகத்தில் தெறித்து… இதயத்தி ல் ஓடி… , வயிற்றுக்குள் கலக்கி …. அப்படியே இடுப்பு வழியாக மெதுவாக இறங்கி கால் கள் படபடக்க நகர்கிறது. படம் முடியும் போது காக்கியை பார்த்தால் நெஞ்சுக்குழி அடைக் கும் அந்தளவுக்கு மிரட்டுகிறார் இயக்குனர். நடித்தவர்கள் வலியோடு வாழ்ந் திருக்கிறார் கள். மொழி மாறினாலும் போலீஸ் எப்போதும் ஒரேமாதிரிதான் என்பதை ரொம்ப அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

போலீஸ் நினைத்தால் அப்பாவிகள் என்ன ஆவார்கள் என்பதை ரத்தமும், சதையும், வலிவும், அலறலும், கதறலுமாக தினேஷூம் மற்றவர்களும் பிரதிபலித்து இருக்கிறார் கள். அட்டகத்தி தினேஷ் மெல்ல மெல்ல பட்டை தீட்டப்படும் வாளாக வளர் ந்து வருகிறார்.

சிறைக்குள் தினேஷ் அண்டு கோ நடத்துகிற உண்ணாவிரதத்தை, கிரிமினல் போலீஸ் மூளை எப்படி முறியடிக்கிறது என்பதெல்லாம் குரூர டுவிஸ்ட்டாக இரு ந்தாலும்… அ ந்த அராஜக அதிகாரியின் கொடூரங்களை பேச வேண்டிய நேரத்தில்… சரியாக பேச வைக்கும் இயக்குனரின் திறமை… கொடூர போலீஸ் அதிகாரிகள் இரு ந்தாலும் நீதிமன்றங்கள்… எப்போதும் தர்மம் காக்கும் என்பதை சொல்லும் இடம் நீதிமன்ற விசாரணை காட்சி.

போலி குற்றவாளிகள் நாங்கள் என போலீசின் அராஜகங்களை நீதிபதியிடம் சொல்லும் போது அதில் உள்ள உண்மையை நீதிபதி புரிந்து கொண்டு , அந்த போலீஸ் அதிகாரியை, “யோவ்… இங்க வா… அப்படியே திரும்பி நில்லு. சாயங்காலம் வரைக்கும் இப்படியே நிக்கணும்” என்று சொல்லி அது வரை காட்டப்பட்ட கொடூர அராஜகத்தினால் ஏற்பட்ட காயங்களுக்கு இயக்குனர் தடவி இருக்கும் கருணை மருந்து.

சமுத்திரகனி … ஒவ்வொரு படத்திலும் ரொம்பவே முத்திரை பதிக்கிறார். சபாஷ் கனி. அவரைப்போலவே ஆடிட்டர் கிஷோர்… ஒவ்வொரு அசைவிலும் பார்வையிலும் தன்னை நிரூபித்திருக்கிறார் கிஷோர். உயிரோடு இரு ந்தாலும் … பிணமாக ஆனாலும் நடிப்பை கண்டுபிடிக்க முடியாமல் அசத்துகிறார்… சபாஷ் கிஷோர்…

குரூர போலீஸ் ஸ்டேஷனில் சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கும் எஸ்.ஐ ஆக டைரக்டர் ராமதாஸ். முறுக்கோடு திரியும் சரவண சுப்பையாவை எப்போதும் அமரவைத்தே பேச வைத்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். “கோட்டாவுல உள்ள வந்துட்டு சிஸ்டம் புரியாம பேசாதே…” என்று சமுத்திரக்கனியை போலீஸ் ஏ.சி., அடக்குகிற அந்த காட்சியும் வசனமும், போலீஸ் அரசியலுக்கும் அதற்குள் உலவும் ஜாதி அரசியலை கோடு போடு கிறது. மொத்தத்தில் வசனங்களில் வாழைப்பழ ஊசி ஏற்றுகிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

ஜி.வி.பிரகாஷின் இசை மிரட்டுகிறது… ஒளிப்பதிவாளர் ராமலிங்கமும் தன்பங்குக்கு மிரட்டுகிறார்.

எல்லாம் சொல்லியாச்சி…

தமிழ் படம்னா ஹீரோயின் இல்லாமலா… கயல் ஆனந்தி ஒரு சில காட்சிகள் வந்தாலும் கண்களில் நிற்கிறார்.

மொத்தத்தில் விசாரணை விருதுகளை அள்ளியதில் ஆச்சர்யம் இல்லை. தமிழ் சினிமாவில் உலகதரத்திற்கு குறிஞ்சி பூ போல எப்போதாவதுதான் இப்படி படங்கள் வருகிறது. பெயரில் வெற்றியை வைத்திருக்கும் வெற்றிமாறன் விருதுகளுக்கு தகுதியானவர்தான்.

கோடங்கி