September 20, 2021

விதிகளை மதிக்காத சின்னத்திரைகளின் போக்கு!

இந்திய சுதந்திரப் போரின்போதுதான் இந்தியாவுக்கான ஊடகங்கள் உருவாகின என்று சொல்லலாம். தமிழ்நாட்டிலும் ஈவெரா பெரியாரின் வரவையடுத்து ஊடகங்கள் முன்னின்று ஒரு கலாசார, பண்பாட்டு, மொழி்ப்புரட்சியை உருவாக்கின.

அந்தச் சூழ்நிலையில்தான் பாவேந்தர் பாரதிதாசன் ஊடகம் குறித்து,

“காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீ தான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணில்
பாய்ந்திடும் எழுச்சி நீ தான்!
ஊரினை நாட்டை இந்த
உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறிவாளர் நெஞ்சில்பிறந்த பத்திரிகைப் பெண்ணே”

…என்று பாடினார்.
edit may 19
அந்த பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த ஊடகப் பெண் தற்போதைய சூழலில், மக்களுக்கு ஏற்கனவே இருக்கும் அறிவை வளர்க்கிறாளா? அல்லது அந்த அறிவையும் அழிக்கிறாளா? என்ற கேள்வி கேட்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

தற்போது,”ஊடக சுதந்திரம் என்ற பெயரில் பல்வேறு சேனல்கள் விதிகளை மீறுகின்றன. விதிகளை மீறும் டி.வி. சேனல்களின் ஒளிபரப்புக்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சில நாட்களுக்கு தடை விதிக்கும்போது, அந்த சேனல்கள் நீதிமன்றம் சென்று அதற்கு தடை பெறுவது வாடிக்கையாகி விட்டது” என்கிறார் கோபிசந்த்.

இந்திய டி.வி. சேனல் நிகழ்ச்சிகளுக்கு மிகக் குறைந்த அளவே கட்டுப்பாடுகள் இருப்பதை வெளிப்படுத்தும் முயற்சியில் ‘மீடியா வாட்ச் இந்தியா’ என்ற அமைப்பில் பணியாற்றும் குண்டூரைச் சேர்ந்த தகவல் உரிமைச் சட்ட செயற்பாட்டாளர் எடாரா கோபி சந்த் கடந்த 3 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளார்.

மத்திய தகவல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட உத்தரவுக்குப் பிறகு, நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களுக்கான விதிமுறைகளை டி.வி. சேனல்கள் மீறியது தொடர்பாக தகவல்களை இஎம்எம்சி வெளியிடுவதில் தகவல் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி கோபி சந்த் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த மே மாதம் இஎம்எம்சி இத்தகவல்களை வெளியிட்ட பிறகு 2014-15-ல் டி.வி. சேனல்களின் பல்வேறு விதிமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. நிகழ்ச்சிகளில் குறுக்கிடும் வகையில் திரையின் ஒரு பகுதியில் பார்வையாளர்களின் கவனத்தை திசை திருப்புவது, ஸ்க்ரோலிங் (திரையில் நகரும்) விளம்பரங்கள் வெளியிடுவது, செய்திகள், உரையாடல்கள் என்ற பெயரில் விளம்பர நிகழ்ச்சிகளை கொடுத்தது என 5,566 விதிமீறல்கள் நடந்துள்ளதாக இஎம்எம்சி புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

1994-ம் ஆண்டின் கேபிள் நெட் வொர்க் விதிகள், பிரிவு 7(10)-ன்படி நிகழ்ச்சிகளையும் விளம்பரங்களை யும் தனித் தனியே ஒளிபரப்ப வேண்டும். நிகழ்ச்சிகளில் எந்த வகையிலும் விளம்பரங்கள் குறுக் கிடக்கூடாது. நிகழ்ச்சியின்போது, திரையின் கீழ்ப்பகுதியில் அசை வற்ற நிலையிலோ அல்லது நகரும் வகையிலோ இவற்றை ஒளிபரப்பக் கூடாது. ஆனால் குறிப்பிட்ட வகை மதுபானங்கள், புகையிலை பொருட்களை குறிப்பால் உணர்த்தும் வகையிலான விளம்பரங்கள் சேனல்களில் 2,965 முறை வெளியானதாக இஎம்எம்சி புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இது குறித்து கோபி சந்த் கூறும் போது, “விதிமீறல்கள் தொடர்பான புள்ளிவிவரங்களை மட்டுமே வெளியிடுவதால் எந்தப் பயனும் இல்லை. விதிகளை மீறும் சேனல்களின் பெயர்களுடன், அவர்கள் மீறிய விதிகள், விதிமீறலின் தன்மை என விளக்கமாக வெளியிடவேண்டும். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் இந்த புள்ளி விவரங்களை மட்டும் வைத்துக்கொண்டு, அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஊரறிந்த ரகசியம். இந்த அமைச்சகம் ஆலோசனை குறிப்புகளை மட்டுமே எப்போதாவது அனுப்புவதால், எந்த சேனலும் அதை பொருட் படுத்துவதில்லை” என்றார்.

இஎம்எம்சி இணைய தளத்தில் கிடைத்த தகவலின்படி, 2014-ல் நடந்த விதிமீறல்களில் 37 % அநாகரிகம் அல்லது ஆபாசம் கொண்டதாக உள்ளது. 11 சதவீதம் பெண்கள் தொடர்பானதாக உள்ளது. ஆனால் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம் கூறும் போது, “டி.வி. சேனல்கள் மீது இது போன்ற புகார்கள் எதுவும் எனது அலுவலகத்துக்கு வருவதில்லை. சமூக வலைதளங்கள் மீதுதான் அடிக்கடி வருகிறது. டி.வி. சேனல் கள் மீது புகார்கள் வந்தாலும் இன்றைய காலகட்டத்தில் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவற் றுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்புகிறது. இவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுப்பது என நான் வியப்பதுண்டு” என்றார்.