September 21, 2021

விண்வெளி வீரர்களுக்கான புதிய ஆடை வடிவமைத்துக் கொடுக்கத் தயாரா?

நாசா விண்வெளி வீரர்கள் தற்போது பயன் படுத்தும் உடை 1992 ஆம் ஆண்டு வடிவமைக் கப்பட்டது. இதனிடையே எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகம் மற்றும் விண்ணிற்கு மனிதரை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ள நிலையில் அனைத்திற்கும் பொருந்தும் வகையிலான உடைகளை தயாரிக்கும் முயற்சிகள் தற்போது இடம் பெற்று வருகின்றன. இதனடிப் படையில் தற்போது நாசா மேற்படி நவீன விண்வெளி உடையை தயாரித்துள்ளது.மேலும் விண்வெளிவீரர்களுக்கு புதிய வடிவிலான உடை தயாரிப்பது குறித்து பொது மக்களிடம் வாக்கெடுப்பும் நடத்தப்படுகிறது
European Space Agency astronaut Parmitano adjusts his space suit before taking part in a simulation exercise at the Star City cosmonaut training centre outside Moscow
விண்வெளியில் பயணம் மேற்கொள்ளும் வீரர்களுக்கு விசேஷமான வடிவில் தரமான உடைகள் தயாரித்து வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எதிர்காலத்தில் அந்த உடை வடிவமைப்பை மாற்ற அமைக்க ‘நாசா’ முடிவு செய்துள்ளது.இதன்பொருட்டு தயாரான உடையில் ஒரு விண்கலத்தில் அமைக்கப் பட்டுள்ள வகையில் உயிர் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒட்சிசன் விநியோகம், காபனீர் ஒட்சைட் நீக்கம் மற்றும் அதிக உஷ்ணம் மற்றும் குளிரிலிருந்து விண்வெளி வீரர்களை பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப் பட்டுள்ளது.மேலும் விண்வெளிவீரர்களுக்கு புதிய வடிவிலான உடை தயாரிப்பது குறித்து பொது மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதன் பொருட்டு அதற்காக புதிய ஆடைகளை வடிவமைத்து அதன் போட்டோக்களாக வெளியிட்டுள்ளது.

மேலும் எந்தவிதமான உடையை விண்வெளி வீரர்களுக்கு வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.தொழில் நுட்பம், அதிநவீன நாகரீகம் மற்ற உயிரினங்கள் போன்ற தோற்றம் கொண்ட ஆடைகள் என 3 விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.