விண்வெளியில் ஃபயர் வருமா? – நாசா ஆய்வு

விண்வெளி மற்றும் அதன் மர்மங்கள் குறித்து சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், நாசாவின் ஜான் ஹெச் கிளென் ஆராய்ச்சி நிறுவனம் விண்வெளியில் தீயை மூட்டி புதிய ஆய்வு ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த ஆய்வுக்கு விண்கலம் தீ ஆராய்ச்சி (Spacecraft Fire Experiment) எனப் பெயரிடப்பட்டுள்ளது. சுருக்கமாக இது சஃபைர் எனக் குறிப்பிடப்படுகிறது.

nasa

இதற்கென பிரத்யேகமாக விண்கலங்கள் அனுப்பப்பட உள்ளன. அவற்றிற்கு சஃபையர் 1, 2 & 3 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு இந்தாண்டே அனுப்பப்படும் எனத் தெரிகிறது.அடுத்தடுத்து இவை விண்வெளிக்க அனுப்பப்படும். இவை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்குத்தேவையான பொருட்கள் சாதனங்களைக் கொண்டு போய் அங்கு கொடுத்த பின்னர் தீவைக்கும் ஆய்வு நடத்தப்படும்.

ஆனால், சர்வதேச விண்வெளி மையத்திற்கு அருகில் இந்த சோதனை நடத்தப்படாது. அங்கிருந்து வெகு தொலைவுக்கு கொண்டு செல்லப்பட்டு இந்த நெருப்பு சோதனை நடத்தப்படும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பஞ்சு மற்றும் பைபர் கிளாஸ் கலந்த கலவையை நெருப்பு மூட்டி இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் டேட்டாக்களை நாசா ஆய்வு செய்யும். தீ எரியும்போது எவ்வளவு ஆக்சிஸன் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதை வைத்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்த உள்ளனர்.