September 18, 2021

“விடுதலையின் பாதையில்” படபபிடிப்பின் நடந்த விறுவிறுப்புகள்!

கடந்த ஆடி ஆவணி மாத காலகட்டத்தில் அமெரிக்க திரைப்பட கலைஞர் சுகிர் பொன்ச்சாமி தனது குழுவுடன் ஆந்திர மாநிலம் விசாகபட்டிணத்தின் தெற்கே உள்ள தேவிபுரம் எனும் ஒரு சிறிய கிராமத்துக்குச் சென்றார். அவர்கள் அங்கே உள்ள திரை தொழிலாளிகளுடன் சேர்ந்து விடுதலையின் பாதையில் எனும் படத்தை தயாரிக்க திட்டமிடடிருநதனர். இந்த விடுதலையின் பாதைக்கும் ஆந்திரா இரண்டாக பாடாய் படுவதற்கும் தொடர்பில்லை.
cine On Path Liberation owl 15
விடுதலையின் பாதை குழுவுக்கு கிடைத்த முதல் வரவேற்ப்பும் அங்கு குழுமியிருந்த திரை தொழிலாளிகளும் கொடுத்த உற்சாகம் பெரிய தெம்பைக் கொடுத்தது.இதற்கிடையில் தேவிபுரம் எனப்படும் ஆன்மிக கிராமம் பல நாட்டை சேர்ந்த மக்களால் தரிசிக்கபடும் வகையில் அமைந்துள்ளது. அங்கே அமெரிக்கர்கள் இரஷியர்கள் மெக்சிகர்கள் என பலரும கூடியிருத்னர். பட குழுவும் தனது பணியை ஆரம்பித்தது. நடிகர்கள் தமது கதாபாத்திரங்களுக்கு தேவையான மேக்கபக்களை கவனித்த வண்ணம் இருந்தனர். அப்போதுதான் திடீர் என ஆரம்பித்தது சமைக்யாந்த்ரா போராட்டம். அங்கிருந்த வண்டி கண்ணாடிகள் உடைக்கப்பட்டன,, கடைகளின் மீது கல் எறியப்பட்டது, இதனால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஆந்திரா மாநிலமே அசைவற்று நின்றது.

இதனால் பல லட்சம் செலவழித்து அங்கே சென்ற ஒரு சிறிய படத் தயாரிபபாளருக்கும் அவரது குழுவின்ருக்கும் இந்த கலவரத்தின் தாக்கம் தாங்க முடியாத ஒன்றாகும். இந்நிலையில் இயக்குனர் சுகிர் பொன்ச்சாமி இந்த படத்தை எப்படியாவது செய்து முடிப்பது என்ற நிலையில் இருந்தார். ஆனால் அங்குள்ள தெருக்களோ போராட்ட காரர்களால் நிரம்பி இருந்தது. அதிகாலை முதல் பின் இரவு வரை ஆரவாரங்கள் ஓயாது இருந்தன. அவசர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி இருந்தது. இதனால் விசாகபட்டினத்திலிருந்து வர வேண்டிய தொழில் நுட்ப கலைஞர்கள் வர முடியவில்லை. இந்த களேபரத்தால் நடிப்பதர்க இருந்த சில நடிகர்கள் கூட விலகி போகும் நிலையில் இருந்தனர்.

இதில் தெலுங்கு கொஞ்சமும் தெரியாத தமிழராகிய சுகிர் தன்னுடன் இருந்த நடிகர்களிடம் நிலைமையை மிகுந்த வலியுடன் உணர்த்தினார். இப்போதைய போராட்டத்திற்கு ஈடு கொடுத்து பொறுத்திருந்து படம் பண்ணும் பண பலம் அவரிடம் இருக்கவில்லை என்றாலும் சக நடிகர்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை தர முன்வந்தனர். உடனே இரவோடு இரவாய் அந்த நடிகர்களை ஒரு ஒதுக்குப்புற வீட்டுககு அழைத்து வந்து தங்க வைத்தனர்.

அத்துடன் படத்தின் பின்னணி தொழிலாளிகளாய் மாறி தயாரிக்கப் பட்டது. அமெரிக்க நடிகையான மரிதேறேஸ் ப்ஜோர்நெருத் தனது முக்கிய கதாபாதிரத்துக்கு தேவையான சகல நுட்பங்களையும் தானே கவனித்தது மட்டுமல்லாமல் உடன் நடிகர்களின் ஒப்பனைகளையும் கவனித்தார்.

மேலும் விசாகபட்டிணத்தின் ஒரு தலை சிறந்த நடிப்பு வாத்தியாரான நவரச மூர்த்தி எனப்படும் பெடபடி வேங்கட ரமண மூர்த்தி படபிடிப்புக்கு தேவையான கருவிகளை தன் கட்டுபாடுக்குள் வைத்திருந்தார். அவரின் மாணவனும் கணணி திரை நிபுணனுமான சந்தர் நந்தி படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிபபதுடன் யூனிட்டுக்கான விருந்தோம்பலை ரகசியமாக ஏற்பாடு செய்தார்

இப்படியாக படபிடிப்பு நடப்பது யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டிய தர்ம சங்கடம் நிலவியது. தப்பித் தவறி ஷுட்டிங் நடப்பது தெரிந்தால் போராட்டகாரர்கள் வந்து தடுக்க கூடும். ஆயினும் இவர்களின் இந்த ரகசிய படபிடிப்பை அவர்கள் பயந்தவாறே ஒரு பத்திரிகை நிருபர் கண்டறிந்து பிரசுரித்து விட்டார். இதனால் படபிடிப்புக் கைவிடப்பட்டு மீண்டும் மூன்று நாள் கழித்து ஆரம்பிக்க பட்டது.

ஒரு வழியாக படபிடிப்பு முடிந்த நள்ளிரவில் அருகருகே ஊர் கொண்ட நடிகர்கள் எல்லாம் வீட்டுக்கு அழைத்து போய் சேர்க்க பட்டனர். மரிதேறேஸ் மீண்டும் அமெரிக்க செல்லவும் சுகிர் சென்னை செல்லவும் சூரியன் உதிக்கும் முன்னே விமான நிலையத்திற்கு கொண்டு செல்ல பட்டனர். அவர்களை கொண்டு சென்ற வண்டி போராட்டகாரர்கள் மீண்டும் வீதிக்கு வறுவதற்கு முன்னே மீண்டும் திரும்ப வேண்டும்.

இதற்கிடையில் அவர்கள் பயணிக்கும் விமானம் பிற்பகல் இரண்டு மணிகென்பதால் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. அதனால் அவர்கள் எட்டு மணி நேரம் கார்டனில் காத்திருந்து ஆந்திராவை விட்டு சென்னை வந்து சேர்ந்தனர்.

இப்படி திகில் உணர்வுடன் இவர்கள் தயாரித்த விடுதலையின் பாதையில் எனும் ஆங்கில படம் இப்போது திரைக்கு தயாராகி உள்ளது.இப்படி பாடுபட்ட சுகிர் பொன்ச்சாமி ஏற்கனவே அமெரிக்காவில் பல பரிசுகள் வென்ற ஒரு படைப்பாளி. மரிதேறேஸ் ப்ஜோர்நெருத் மிகுந்த திறமைக்கான அங்கீகாரம் பெற்ற ஒரு நடிகை. நவரச மூர்த்தி ஆந்திரா பல்கலை கழகத்தில் ஒரு மதிப்பு மிக்க அபிநய பேராசிரியர். இந்த கூட்டணியில் இந்த படமும் பெரும் எதிர் பார்ப்புகளுடன் வெளிவர விருக்கிறது.