விஜய் வீட்டில் ரெய்டு! – ஏன்? – வருமான வரித்துறை விளக்கம்!!
சென்னை மற்றும் மதுரையில் கடந்த 2 நாளாக நடந்த சோதனை பற்றி வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் 38 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரி சோதனையில் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பைனான்சியர் அன்புசெழியன், நடிகர் விஜய், அவரது நண்பன் சரவணன் ஆகியோர் வீட்டில் சோதனை நடந்ததை வருமான வரித்துறை உறுதி செய்துள்ளது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
இடத்ன் தொடர்ச்சியாக செவ்வாயன்று கடலூர் மாவட்டம் நெய்வேலி எல்.எல்.சி. சுரங்கம் பகுதி யில் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த விஜயிடம் வருமானவரித்துறை யினர் விசாரணை செய்தனர்.
பின்னர், அங்கிருந்து விஜயை காரில் அழைத்து வந்து சென்னை அருகே பனையூரில் உள்ள அவரது பங்களாவில் விசாரணை செய்தனர். அதேவேளையில் அவரது வீட்டில் சோதனையும் நடை பெற்றது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் வருமானவரித்துறை யினர் விஜயிடமும்,அவரது மனைவி சங்கீதாவிடமும் தொடர்ந்து விசாரணை செய்தனர்.
புதனன்று இரண்டாவது நாளாகவும் விஜய் பங்களா உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் இச் சோதனை நீடித்தது. சோதனையையொட்டி, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. முக்கியமாக பனையூரில் உள்ள விஜய் பங்களாவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அவர் வீட்டுக்கு செல்லும் சாலையிலும் பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டனர். விஜயி டமும், அவரது குடும்பத்தினரிடமும் திரைப்படத்துக்கு வாங்கும் ஊதியம்,அவரது முதலீடு கள்,சொத்துக்கள் ஆகியவை குறித்து கேள்விகள் கேட்டு, பதிலை அதை வாக்குமூலமாக வருமான வரித்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர். சோதனையிலும், விசாரணை இரண்டாவது நாளாகவும் நீடித்ததால், வருமானவரித்துறை ஷிப்ட் அடிப்படையில் அங்கு பணியில் ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு தேவையான உணவை ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்து வரவழைத்தனர். மேலும் விஜய் குடும்பத்தினரிடம் சுமார் 20 மணிக்கு மேலாக வருமானவரித்துறை விசாரணை மேற்கொண்டதாக வும் கூறப்பட்டது. இந்நிலையில் ஏறக்குறைய 24 மணி நேரங்களுக்கு மேலாக நடிகர் விஜய் வீட்டில் நடந்து வந்த வருமானவரி சோதனை புதன் இரவு 8 மணியளவில் நிறைவு பெற்றது.
இதையடுத்து கடந்த 2 நாளாக நடந்த சோதனை பற்றி வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் 38 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரி சோதனையில் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பைனான்சியர் அன்புசெழியன், நடிகர் விஜய், அவரது நண்பன் சரவணன் ஆகியோர் வீட்டில் சோதனை நடந்ததை வருமான வரித்துறை உறுதி செய்துள்ளது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.