October 16, 2021

விஜய் சேதுபதி + மடோனா நடித்த காதலும் கடந்து போகும் ! ஆல்பம்

சூது கவ்வும்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வந்தார் விஜய் சேதுபதி. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிப்பவர் மடோனா செபஸ்டியன். இவர் பிரேமம் மலையாள படத்தில் நடித்தவர். இப்படம் பிப்ரவரி 12ம் தேதி வெளியாக இருக்கிறது.


கொரியன் ரீமேக் படம் இது. விஜய் சேதுபதி இப்படத்தில் கவுன்சிலரிடம் வேலை செய்பவராக நடித் திருக்கிறார். நாயகி மடோனா சென்னையில் வேலை தேடும் பெண்ணாக நடித்திருக்கிறார். இவருக்கும் விஜய் சேதுபதிக்கும் காதல் எப்படி உருவாகிறது என்பதே படத்தின் கதை.

இப்படத்தில் காமெடிக்கென்று தனி டிராக் இல்லாமல், கதையோடு ஒன்றி காமெடியை இணைத்திருக் கிறார்கள்.2 பாடல்கள் மற்றும் 2 சண்டைக்காட்சிகளும் இடம் பெறுகின்றன.சமுத்திரக்கனி இப்படத்தில் போலீஸ் எஸ்.ஐ.யாக நடித்திருக்கிறார். நலன் இயக்கிய ‘சூதுகவ்வும்’ படத்தை விட முற்றிலும் மாறுபட்ட படமாக எடுத்திருக்கிறார்களாம்

மேலும் இந்தப் படம் குறித்து இயக்குநரிடம் கேட்டப்போது “தமிழ் சினிமாவில் ஒன்று காதல் தூக்கலாக இருக்கும், அல்லது நகைச்சுவை தூக்கலாக இருக்கும், ஆனால் இரண்டுமே சமமாக உள்ள படங்கள் என்பது வருவதில்லை, என்ற குறையை தீர்க்கும் விதத்தில் இப்படத்தை இயக்கியிருக்கிறேன், என்று படம் குறித்து கூறிய நலனிடம், “இது என்ன கொரியன் படத்தின் தழுவலா?, என்றதற்கு “தழுவல் அல்ல, கொரியன் படத்தின் ரீமேக் தான் இந்த படம், முறையான ரீமேக் ரைட்ஸ் வாங்கியே இப் படத்தை எடுத்துள்ளோம்” என்ற டைரக்டரிடம், ‘அது என்ன படம்?’ என்றதற்கு, “என் படத்தை பார்த்தப் பிறகு ரசிகர்கள் அது எந்த கொரியன் படம் என்று தெரிந்துக்கொள்ளட்டும், இப்போதைக்கு அது சஸ்பென்ஸாகவே இருக்கட்டும்” என்கி றார்.