விஜயகாந்த் ரொம்ப நல்லவரு!! – ஏன் தெரியுமா?

விஜயகாந்த் மீது குறைகள் என்று கூறப்படும் 3 விஷயங்கள் :

1. சரியாக பேசுவதில்லை – செந்தமிழ்”லயே பேசி பேசி ஆட்சிய பிடிச்சு ரெண்டு கட்சிகளும் என்ன பண்ணிட்டாங்க நமக்கு ????
நாட்டை எப்படி வச்சுருக்காங்க ?????விஜயகாந்த் 1 1/2 வருடங்களுக்கு முன்னால வரைக்கும் நல்லா பேசிக்கிட்டு தானே இருந்தார். You Tube”ல போய் பாருங்க. சட்டசபைல எதிர் கட்சியா பேசினப்போ கூட நல்லா தான் பேசுவாரு… இப்போ உடல்நிலை காரணமா கொஞ்சம் முன்ன போல பேசுரதில்ல. நமக்கெல்லாம் உடல் நிலை எப்பவும் இப்படியே இருக்கும் இல்ல..???அவருக்கும் சரியாகும்.எப்படி பேசுராங்க”ங்கறத விட, என்ன செய்வாங்க, என்ன செஞ்சாங்க என்ன செய்யப் போறாங்க”ங்கறது முக்கியம்.
vk 28 4 16
2. நாட்டை ஆள நிர்வாகத்திறமை வேணும் –

ஆமா…கலைஞரும், ஜெயலலிதாவும் லண்டன்”ல பொலிட்டிகல் சயின்ஸ் & மேனேஜ்மென்ட் பத்தியெல்லாம் படிச்சுட்டு அதுக்கப்புரம் பல விசயங்களை நிர்வாகம் பண்ணிட்டு அனுபவத்தோடதான் அரசியலுக்குள்ள வந்திருக்காங்க…!!! அடப் போங்கப்பா.. அண்ணா இறந்ததால் கலைஞர் ஆட்சிக்கு வந்தார். MGR இறந்ததால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். இரண்டு பேருமே அந்த கட்சியை உருவாக்கியவர்கள் இல்லை. எந்த நிர்வாகத்திறமையை கண்டு அவ்ர்களை நாம் ஆதரித்தோம். ??????

ஆனால் விஜயகாந்த், தான் சார்ந்த திரைத்துறையில் நடிகர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது அதற்கு முன்பு பலர் தலைவராக இருந்த போதும் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த கடனை அவர் தலைவராக நிர்வகித்த காலத்தில். அந்த கடனை முழுவதுமாக அடைத்தார். நிர்வாகம் செய்யத்தெரியாத ஒரு மனிதர் ஒரு அமைப்பின் கடனை தீர்க்க முடியுமா ???

கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவைப்போல் விஜயகாந்த் கட்சியில் நுழைந்தவர் இல்லை. தன் சொந்த முயற்சியில் கட்சியை உருவாக்கி, 2005″ல் கட்சி ஆரம்பித்து 2006″ல் சந்தித்த முதல் தேர்தலிலேயே தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு 11% சதவீத வாக்குகளை பெற்று ஒரு சட்டமன்ற தொகுதியிலும் ஜெயித்தவர். 5 ஆண்டுகளில் அடுத்த 2011 தேர்தலிலேயே எதிர்க்கட்சி தலைவராகவும் வளர்ச்சி கண்டவர்.

தற்போது 2016 தேர்தலுக்காக பணத்திற்காக எந்த பக்கமும் போகாமல் தி.மு.க , அ.தி.மு.க அல்லாத 6 முக்கிய கட்சிகள் கொண்ட ஒரு பலமான கூட்டணியை உருவாக்கி தி.மு.க”வுக்கும் அ.தி.மு.க”வுக்கும் பெரிய நெருக்கடியை கொடுத்திருக்கிறார்.

இவரை எப்படி நிர்வாகத் திறமை இல்லாதர் என்று சொல்ல முடியும் ????

3. கோபப்படுகிறார் –

உள்ளுக்குள்ள வஞ்சத்த வச்சு வெளிய சிரிச்சுகிட்டு ஓட்டுக்காக நடிக்கத் தெரியாத மனுஷன். அதே விஜயகாந்த் சில இடங்கள்ள கண்ணீர் விட்டு அழுதிருக்காரே…!!! மேடை நாகரீகம்”ங்கற பேர்ல அவருக்கு அதையும் மறைக்கத் தெரியல….!!! பாவம் இந்த ஜனங்களுக்கு அது தான் பிடிக்கும்னு அவருக்கு தெரியல போல…!!! கோபமோ, அழுகையோ வெளிப்படையா காட்டிடுறார்.நேருக்கு நேரா கோபப்படுறவன நம்பலாம்..!!! சிரிச்சு சிரிச்சு வஞ்சத்தயெல்லாம் உள்ள வச்சுட்டுருக்குறவனத்தான் நம்ப முடியாது…!!!

இதை தவிர தான் கடந்து வந்த வாழ்க்கை பாதையிலும் நடிகர் சங்கத்திலோ ஏதாவது ஊழல் குற்றச்சாட்டுகளோ அல்லது லஞ்ச குற்றச்சாட்டுகளோ இருக்கிறதா அவர் மேல்…..????இல்லை…இவன் குடும்பத்தை அழித்தான், அவன் குடியை கெடுத்தான் என்ற குற்றச்சாடுகள் இருக்கிறதா….????

மாறாக நடிகனாய் இருந்த போதிருந்தே பல பேருக்கு பல்வேறு உதவிகள் செய்து வந்திருக்கிறார். இன்னும் செய்து கொண்டிருக்கிறார். கட்சியின் மூலம் நலத்திட்ட உதவிகள் செய்யும்பொது கூட, “நான் இவ்ளோ தான் இதுக்கு பணம் கொடுத்திருக்கேன். மீதியெல்லாம் கட்சி உறுப்பினர்கள் கொடுத்த பணம்” என்று வெளிப்படையாக சொல்கிறார்.

ஆனால் இங்கு அரசாங்க உதவிகள் வெள்ள அவசரத்திற்கு செய்யப்படும்போது கூட அவருடைய ஸ்டிக்கர் ஒட்டி கொடுக்கிறார்கள். தானாக கொடுப்பவர்களிடமும் கட்டாயப்படுத்தி ஒட்டச் சொல்கிறார்கள்.

* வெள்ளத்துல, களத்துலேயே வேட்டிய மடிச்சு கட்டிட்டு வெறும் கால்ல இறங்கி மக்கள சந்திச்ச விஜயகாந்த் அதை பெருசா விளம்பரப்படுத்திக்கல. ஊடகங்களும் அதை காமிக்கவே இல்ல.

* அதுக்கு அப்புறமும் கூட அத நான் அதைப் பண்ணினேன்”னு எங்கேயும் அவர் சொல்லிக்காட்டி தனக்கோ தன் கட்சிக்கோ விளம்பரம் தேடலை.

* வெள்ளத்துலே அவர் கொடுத்த நிவாரணப் பைகள்”ல கூட அவர் கட்சி பெயரோ, அவர் பெயரோ, படமோ எதுவுமே இல்ல.

* தன்னோட மாநாடு நடக்குற அன்னிக்கு தவிர வேற ஒரு நாள் கூட தன்னோட கேப்டன் டிவி”ய அவர் கட்சி விளம்பரத்துக்காவும் தனக்காவும் பெருசா பயன்படுத்திக்கிறது இல்ல.

ஆனா….!!! நாம அவரைத் தான் எப்போவும் கிண்டலும் கேலியும் பண்றோம்….!!! தொடர்ந்து செய்வோம்….!!!உண்மையாய் உதவி செய்ய வருபவர்களை பைத்தியக்காரர்களாய் சித்தரிப்பதே நாம் காலம் காலமாக செய்து வரும் விஷயம்…!!!காமராஜரையே தோற்கடித்தவர்கள் அல்லவா நாம் !!!

வழக்கம்போல் அ.தி.மு.க அல்லது தி.மு.க வுக்கே ஓட்டளிப்போம்.பி.எஸ் வீரப்பா”வின் திரைப்பட வசனம் “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்” நம்மை யாரும் அழிக்கத்தேவை இல்லை. நாமே போதும். நமக்கு நாமே….!!