September 17, 2021

வாழ்நாள் முழுவதும் மருத்துவராய் செயல்படும் சூப்பர் சிப்!

EPFL’s (Ecole Polytechnique Federale de Lausanne) என்னும் ஆராய்ச்சி கூடம் 1 செமி அளவில் ஒரு சிப்பை உருவாக்கியுள்ளனர். இதை உடலில் இஞ்செக்ட் செய்து விட்டால் வாழ் நாள் முழுவதும் ஒரு மருத்துவராய் செயல்படுமாம். ஒரு டாக்டரிடம் சென்றால் என்னவெல்லாம் பரிசோதனை செய்வாரோ அது அத்தனையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் உங்களுக்கு செய்து கொண்டே இருந்து என்ன உடம்பில் பிரச்சினையோ உடனுக்குடன் தெரியபடுத்தும்.
ravi 1
இந்த சூப்பர் சிப் வந்தால் என்ன பிரச்சினை என்பதை துல்லியமாக கண்டுகொள்வது மட்டுமில்ல்லாமல் இதை சில செட்டிங்க்ஸ் செய்தால் உங்கள் மருத்துவருக்கே இது தெரியபடுத்தும் அளவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் ஆராய்ச்சியாளர்கள் இதன் உபயோகம் குழந்தைகள் மற்றும் வயதான பெரியவர்களின் பிரச்சினையை அவர்களுக்கு சொல்ல முடியாத போது இது தன் வேலையை திறம்பட செய்யுமாம்.

அது மட்டுமல்ல சரியான நேரத்தில் மருந்து மற்றூம் உடற்பயிற்ச்சி மற்றும் டெஸ்ட் செய்ய அறிவுறுத்தும். இதன் கம்யூனிகேஷன் முழுவதும் ப்ளூடூத் மூலம் உங்கள் மொபைல் வழியே உங்களுக்கும் உங்க டாக்டருக்கும். இந்த சூப்பர் சிப். இதற்கு தேவையான மின்சாரம் உடலின் சூடு மூலமே கிடைக்குமாம். இது 25 வருடம் முதல் 40 வருடம் வரை வேலை செய்யுமாம்……………..கேட்க மகிழ்ச்சியாய் இருந்தாலும் பயமாய் இருக்கின்றது.

Superchip 1cm X 1cm can be your personal doctor in your body for lifelong…..