September 18, 2021

வாழ்க்கையை மழுங்கடிக்க வழிகாட்டும் தொடு திரை தொலைக் காட்சி தயார்! – வீடியோ

குழந்தைகளுக்கோ, பெரியவர்களுக்கோ விளையாட்டுக்கள் என்பது உடலியல், உளவியல், சமூக வளர்ச்சி ஆகியவற்றுக்கு துணையாக அமையும் விஷயம் என்றால் மிகையல்ல. விளையாட்டுக் களில் முன்னெல்லாம் நாட்டுப்புற விளையாட்டுக்கள் என்றும் நகர்ப்புற விளையாட்டுக்கள் என்று இரண்டு பிரிவாக பிரித்தார்கள். நாட்டுப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு பரவியது ஒரு வகை. இன்று நாம் காணும் நகர்ப்புற விளையாட்டுகள் பெரும்பாலும் நாட்டுப்புற விளையாட்டுக் களில் கிடைக்கப் பெற்றிருந்தன.
tec tv aug 20
ஆண்கள் விளையாடும் கபடி, சதுரங்கம், நீச்சல் போன்றவை இவ்வகையில் அடங்கும். சில விளையாட்டுக்கள் நகர்ப்புறங்களில் இருந்து நாட்டுப்புறத்திற்கு பரவியது. கைப்பந்து, கிரிக்கெட் போன்றவை.இவற்றில் ஆண் பிள்ளை விளையாட்டு, பெண்பிள்ளைகள் விளையாட்டு என இரண்டு வகை உண்டு. மேலும் கோடை, மழை என ஒவ்வொரு பருவத்திற்கேற்றவாறும் இவ்வகை விளையாட்டுகள் அமைந்துள்ளன. அரசுப் பள்ளிகளில் இதற்கென்று ஒருதுறையும் இன்றும் உள்ளது. பி.டி.வாத்தியார் என அழைப்பார்கள். பி.இ.டி. பிரியட்டில் அனைத்து மாணவர்களும் விளையாட்டு மைதானத்திற்கு சென்று தங்கள் விருப்பப்படி விளையாடுவார்கள். இன்று கல்வி வியாபாரமாக்கப் பட்டதைத்தொடர்ந்து தங்கள் பள்ளிகள் கல்வியில் முதல் இடம் பெறவேண்டும் என்ற நோக்கில் விளையாட்டுத்துறை பெயரளவில் செயல்படுவது கண்கூடான உண்மை.

கிராமப்புற விளையாட்டுக்களை பல வகைப்படுத்தலாம். ஆடுபுலி ஆட்டம், கிட்டிப்புள், ஜோடிப்புறா, வண்டிப்ப ந்தயம், கோலிக்குண்டு,சிலம்பு, ச+ விளையாட்டு என பலவகையுண்டு. இதில் அக விளையாட்டு மற்றும் புற விளையாட்டு என்ற இருவகை உண்டு. வீட்டினுள் விளையாடப்படும் அகவிளையாட்டுக்களான தாயம், பல்லாங் குழி, ஆற்றங்கரையில் மணலில் விளையாடப்படும் கீச் கீச் தாம்பலம்.. கியா கியா தாம்பலம், தொட்டுப் பிடித்தல் விளையாட்டு, கண்ணாமூச்சி ரே..ரே. விளையாட்டு. ஆண், பெண் இருபாலரும் விளையாடும் கல்லாங்காய் எனப்படும் சுட்டி பிடித்தல், நீர்விளையாட்டு என உள்ளது.

இவ்விளையாட்டுக்கள் பருவத்தின் தன்மைக்கும் மாறுபடும். ஒரு பருவத்தில் கிட்டிப்புள்ள விளையாட்டு, மற்றொரு காலத்தில் பம்பரம், ஒரு காலத்தில் புளியங்கொட்டை, காற்றாடிக்கும் காலத்தில் பட்டம் விடுதல் போன்ற விளை யாட்டுக்கள் என பல வகை உண்டு. இதே போல ஆண் களின் வீர விளையாட்டாக புலிவேடம், சடுகுடு விளை யாட்டு, இளவட்டக்கல், ஓட்டம், மோடி விளையாட்டு, தாயம், பல்லாங்குழி, மஞ்சள் நீர் தெளித்தல், அம்மாணை ஆடுதல், கயிறு குதித்தல் முதலியவை மனமகிழ்ச்சி உணர்வை மையமிட்டே அமைகின்றன.
ஆடுபுலி ஆட்டம்

இந்த விளையாட்டு அறிவுத்திறனை சோதிக்கும் விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டுக்கு மூளையைச் செலுத்தி மனதை ஒருமுகப்படுத்தி ஆட வேண்டியிருக்கும். இந்த விளையாட்டிற்கு மூன்று சிறுகற்களும் 15 புளியங்கொட்டைகளும் தேவைப்படுகிறது. ஆடுகளைக்கொண்டு புலியை நகர விடாமல் கட்டியும் விடுவார்கள். புலியால் ஆடுகள் வெட்டவும் படும். இவ்வாறு நாட்டுப்புற ஆண்கள் விளையாடும் இவ்விளையாட்டு தற்பொழுது சதுரங்கம் என்ற செஸ் விளையாட்டாக மாறிவிட்டது.

ஆனால் இதெல்லாம் பழங்கதையாகிப் போய் சதா நேரமும் செல்போனிலும், டேப்லட்களிலும் வீடியோ கேம்ஸ் விளையாடி அலுத்து போய் விட்டார்கள் நம்மவர்கள். அதை போக்க பெரிய திரையில் இப்போதைய கேம்களை விளையாடும் சாதனம் வந்துள்ளது வந்துவிட்டது புதிய சாதனம். இதை பொருத்திக் கொண்டால் எல்.இ.டி. டி.வி. யை தொடுதிரை சாதனமாக மாற்றி, பெரிய திரையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீடியோ கேம்ஸ் விளையாடலாம். வேறுசில திட்ட உபயோகத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த வசதியை வழங்கும் சாதனத்தின் பெயர் ‘டச்ஜெட் வேவ்’ என்பதாகும். ஆண்ட்ராய்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த கருவி தயாரிக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டின் 4.4 கிட்கேட் இயங்குதளத்தில் செயல்படும் எல்.இ.டி.வி.யில் இந்த சாதனத்தை பொருத்திக் கொண்டால், அது தொடுதிரை சாதனமாக மாறிவிடும். அகச் சிவப்பு கதிர்களை அனுப்பி டி.வி.யை. தொடுதிரை கருவியாக மாற்றிவிடுகிறது. எனவே டி.வி. பிரமாண்ட டேப்லட் போல செயல்படுவதால் வீடியோ கேம் பிரியர்களுக்கு கொண்டாட்டம் தான்.

அத்துடன் ‘டச்ஜெட்’ கருவி, வயர் இணைப்பற்ற நெட்வொர்க் சாதனமாகவும் செயல்படுகிறது. எனவே இதைப் பயன்படுத்தி இணையதளத்தில் உலவி, தேவையான அப்ளிகேசன்கள், விளை யாட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புளூடூத் வசதியும் இருப்பதால் கணினி, செல்போன் போன்ற மற்ற சாதனங்களுடனும் இணைப்பு ஏற்படுத்தி பயன்படுத்தலாம். குழந்தைகள் ஓவியம் வரைய, வீட்டுப்பாடம் செய்து பார்க்கும் போர்டாக பயன்படுத்த, இன்னும் பலப்பல திட்டச் செயல்களுக்கும் டி.வி.யை ‘டச்ஜெட்’ கருவியுடன் இணைத்து பயன்படுத்தலாம்.

இண்டியகோகோ நிறுவனம் இந்த சாதனத்தை விற்பனைக்கு கொண்டு வருகிறது. அறிமுகமான 4 மணி நேரத்தில் 20 ஆயிரம் டாலருக்கு அதிகமான விற்பனையை எட்டி உள்ளது. இந்த சாதனத்தின் விலை 99 அமெரிக்க டாலர்களாகும்.ஆனால் இப்போக்கு தப்பு என்பதை காலம்தான் உணர்த்தும்.

தகவல் உதவி :வைகை அனிஷ்