October 19, 2021

வால்மார்ட் – பார்தி நிறுவனங்கள் பிரிகின்றன!

சில்லரை வணிகத்தில் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம், இந்தியாவில் பார்தி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் பல கிளைகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில், இந்நிறுவனங்கள் பிரிய முடிவெடுத்துள்ளன. மேலும் இருவரும் தனித்தனியாக செயல்படவும் முடிவெடுத்துள்ளனர். வால்மார்ட்-பார்தி நிறுவனங்கள் இருவருக்கும் 50-50 சதவீதம் பங்குகள் இருந்தது. தற்போது இருவரும் பிரிய முடிவெடுத்து இருப்பதால் பார்தியின் 50 சதவீத பங்குகளையும் வால்மார்ட் நிறுவனமே வாங்க முடிவெடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக இருக்கிறது.
9 =_Walmart_India_Bharti.
பெஸ்ட் பிரைஸ்’ என்ற பெயரில் இவ்விரு நிறுவனங்களும் கூட்டாக செயல்பட்டபோது அமிர்தசரஸ், ஜலந்தர், கோட்டா, போபால், லூதியானா, ராய்ப்பூர், விஜயவாடா, ஆக்ரா, மீரட், லக்னோ, ஜம்மு, குண்டூர், அவுரங்காபாத், அமராவதி, ஹைதராபாத் மற்றும் ராஜமுந்திரி உள்ளிட்ட 20 இடங்களில் சில்லரை வர்த்தக கடைகளை நடத்திவந்தன.
இந்நிலையில் தற்போது இவ்விரு நிறுவனங்களும் தற்போது பிரிந்துள்ளன.

இந்தியாவில் வால்மார்ட் நிறுவனம், இனி தானே 100 சதவீத முழு உரிமையாளராக ‘பெஸ்ட் பிரைஸ் மார்டன் ஹோல்சேல்’ என்ற பெயரில் சில்லரை வர்த்தகத்தில் செயல்படும். அதேப்போன்று பார்தி நிறுவனம் ‘ஈசி டே’ என்ற பெயரில் நாடு முழுவதும் சில்லரை வர்த்தக கடைகளை தொடர்ந்து இயக்கும்,

இதுகுறித்து பார்தி நிறுவனத்தின் துணை தலைவர் ராஜன் பார்தி கூறுகையில், வால்மார்ட்டை விட்டு பிரிந்தாலும் சில்லரை வணிகத்தில் பார்தி நிறுவனம் தொடர்ந்து செயல்படும். உலக தரத்தில் சுமார் 2012 ஸ்டோர்கள் துவங்க முடிவு செய்துள்ளோம். நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எங்களது நிறுவனத்தின் சேவை இருக்கும் என்று கூறியுள்ளார்.

Bharti, Walmart call off India JV; to independently pursue retail business
(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((
Ending speculations over future of their partnership, Bharti Enterprises and Wal-Mart Stores, Inc. said today they are going separate ways for operations in the Indian retail sector. subsequently, the US retail major will buy out the Indian partner from their 50:50 wholesale cash and carry joint venture — Bharti Walmart, for an undisclosed sum.